கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்: கொள்முதல் விலை அதிகரிக்க கோரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : கரும்பு கொள்முதல் விலையை, 3,000 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி, கொட்டும் மழையில் கரும்பு விவசாயிகள், சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கரும்பு கொள்முதல் விலையை, டன்னுக்கு, 3,000 ரூபாயாக அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தென்னிந்திய கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே, நேற்று காலை உண்ணாவிரதம் துவங்கியது. 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். திடீரென மழை பெய்ததால், பந்தல் நனைத்து, மழைநீர் ஒழுக ஆரம்பித்தது.

மாடி ரயில் மேம்பாலத்தின் கீழே அமர்ந்து, கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இதில், தமிழக கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் எம்பாவை யோகநாதன், செயலர் நாகுசுப்ரமணியன், இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் விருதகிரி உள்ளிட்ட பலர் பேசினர். உண்ணாவிரதம் குறித்து அவர்கள் கூறியதாவது: கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மீண்டும் லாபத்தில் இயங்குவதற்கு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். மின்வெட்டு, ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, வறட்சி, பயிர்கடன் கிடைக்காதது போன்ற காரணங்களால் கரும்பு மகசூல் பாதிக்கப்படுகிறது.

மகசூல் இழப்பிற்கு ஏற்ப இழப்பீடுகளை வழங்க வேண்டும். வெட்டுக்கூலி மற்றும் வாகன வாடகையை, சர்க்கரை ஆலை நிர்வாகங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை சேர்க்காமல் இந்த ஆண்டுக்கான கரும்பு கொள்முதல் விலையை, 3,000 ரூபாயாக உயர்த்தி அரசு அறிவிக்க வேண்டும். கரும்புக்கான கிரயத்தொகையை, 14 நாட்களுக்குள் தராமல், சர்க்கரை ஆலைகள் இழுத்தடிக்கின்றன. இதுபோன்ற செயலில் ஈடுபடும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், வட்டியுடன் கிரய த்தொகை வழங்கவும் உத்தரவிடவேண்டும். இறக்குமதி செய்வதால், பெட்ரோல் விலை அதிகரிப்பதை தடுக்க, "எத்தனால்' உற்பத்தி செய்வதற்கு, சர்க்கரை ஆலைகளுக்கு, மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும். எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு வருவதால், சுற்றுசூழல் மாசுப்படுவதும் தடுக்கப்படும். எங்கள் கோரிக்கைகளை அரசு செயல்படுத்தினால் மட்டுமே, வருங்காலத்தில் கரும்பு விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்