சென்னை: "நதிநீர் பங்கீட்டு ஆணையம் அமைவதை, தமிழக அரசு எதிர்க்கும்,'' என, பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் கூறினார். டில்லியில், நீர்வளத் துறை கவுன்சில் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள, நீராதாரங்கள், தென்மேற்கு பருவ மழையையும், வடகிழக்கு பருவநிலையையும், 80 சதவீதம் நம்பி இருக்கிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், தமிழகம், கடும் வறட்சியை, சந்தித்து வருகிறது. தற்போது, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். தமிழகம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, நீர் பிரச்னையால் தவித்து வருகிறது என, இந்திய வேளாண்மைக் கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் அமைவதை, தமிழகம் எதிர்க்கிறது. ஏனெனில், ஏற்கனவே நீர் பங்கீட்டிற்காக, தீர்ப்பாயம் ஒன்று, இயங்கி கொண்டிருக்கும் போது, புதிதாக தீர்ப்பாயம் தேவையற்றது. நதிநீர் மேலாண்மை கொள்கைகளில், மாற்றம் ஏற்படுத்த வேண்டும்; நீர் ஆணையம் அமைப்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில், நீர் ஆணையம், விவசாயிகளுக்கு வழங்கும் நீருக்கு, கட்டணம் வசூலிக்கும் அபாயம் உள்ளது. இது, மாநில உரிமையை பறிக்கும் செயலாகும். அணையை பாதுகாப்பதும், அதை, ஆய்வு செய்யும் உரிமையும், அந்த அணை அமைந்துள்ள, மாநிலத்தின் உரிமை. அதை, மத்திய அரசு எந்த வகையிலும், பறிக்க முயற்சிக்க கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.