மேட்டூர்: டெல்டா பாசன நீர் நிறுத்தப்பட்டதால், மேட்டூர் அணை நீர்மட்டம், எட்டு நாட்களுக்கு பின், அரை அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, செப்டம்பர், 17ல் நீர்திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம், 32 அடியாகவும், நீர் இருப்பு, 8.5 டி.எம்.சி.,யாகவும் குறைந்ததால், கடந்த, 21ம் தேதி காலை பாசன நீர் நிறுத்தப்பட்டது. பாசனத்துக்கு ஜனவரி, 28 வரை நீர்திக்க வேண்டிய நிலையில், 37 நாட்களுக்கு முன்பாகவே பாசன நீரை நிறுத்தியதால், டெல்டா சம்பா சாகுபடி பாதித்தது. பாசன நீர் நிறுத்தப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வந்த நீர் அப்படியே இருப்பு வைக்கப்பட்டது. இதனால், கடந்த, 21ம் தேதி, 32.480 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 33.090 அடியாகவும், எட்டு நாளில் அணை நீர்மட்டம், அரை அடி உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் குறைந்தளவு கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆண்டு முழுவதும் காவியில் தண்ணீர் வரத்து காரணமாக, பிற அருவிகளில் இருந்து மாறுபட்டு ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டும். இதன் அழகை கண்டு ரசித்தும், காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சென்று மகிழ்ச்சியாக இருக்கவும், இங்கு சமைக்கப்படும் மீன்களை ருசிக்கவும், ஆண்டு முழுவதும், தமிழகம், கர்நாடாக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இந்திய õவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் குறைந்தளவு தண்ணீர் மட்டும் ஓடியது. தமிழக, கர்நாடக எல்லைகளில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், வடகிழக்கு பருவ மழையும் பொய்த்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில், சில நாட்களாக, வினாடிக்கு, 1,300 கன அடி தண்ணீர் ஓடுகிறது. இதனால், காவிரியாற்றில் பல இடங்களில் பாறைகள் தெரிவதுடன், அருவிகளிலும், மிகக் குறைந்த அளவு தண்ணீர் கொட்டுகிறது. பெரும்பலான இடங்களில் அருவியில் தண்ணீர் இல்லாமல், வெறும் பாறைகள் மட்டும் தெரிகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், அருவிகளின் அழகை கண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள், ஊட்டமலையை ஒட்டியுள்ள ஆபத்து நிறைந்த பகுதிகளில், குளித்து வருகின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறையில் ஒகேனக்கல்லுக்கு, இன்ப சுற்றுலா வந்த பயணிகள், இங்கு குறைந்தளவு தண்ணீர் ஓடிவதால், அருவிகளின் அழகை கண்டு ரசிக்க முடியாமல், பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.