சென்னை: மழை பெய்த போதும், இசையமைப்பாளர், ரகுமான் இசை நிகழ்ச்சியை, பல ஆயிரம் ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்தனர். ஜெயா "டிவி' மற்றும், ஏர்செல் ஆகியன இணைந்து, இசையமைப்பாளர் ரகுமானின், "தாய் மண்ணே வணக்கம்' என்ற, நேரடி இசை நிகழ்ச்சியை, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்தன. சென்னையில், நேற்று காலை முதலே, மழை பெய்து கொண்டிருந்தது. எனினும், திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மழையிலும் பல ஆயிரம் ரசிகர்கள், அங்கிங்கு நகராதபடி, நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்தனர்.
பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, ஹரிஹரன், கார்த்திக், சித்ரா, சின்மயி உள்ளிட்டோர், பாடல்களைப் பாடினர். இசை அமைப்பாளர் ரகுமானும் பல பாடல்களைப் பாடினார். நிகழ்ச்சியில், ராகுமான் பேசியதாவது; கடும் மழையிலும், இசை நிகழ்ச்சிக்கு வந்துள்ள ரசிகர்களுக்கு, நன்றி. என் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளது, மிகவும் பெருமையாக உள்ளது. வழக்கமாக, இசை நிகழ்ச்சிகளில் தமிழ் பாடல்களுடன், ஆங்கில பாடல்களும் பாடுவோம். ஆனால், இந்த நிகழ்ச்சியில், தமிழ் பாடல்கள் மட்டுமே பாட உள்ளோம். அமெரிக்காவைச் சேர்ந்த ஏழு பெண் கலைஞர்கள், முதல் முறையாக என் குழுவில், "டிரம்ஸ்' வாசிக்க உள்ளனர். அந்த நிகழ்ச்சி இது என்பது மிகழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு, ரகுமான் பேசினார். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், டில்லியில் பாலியல் கொடுமைக்கு பலியான, கல்லூரி மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.