சென்னை: பலத்த மழையால், கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கங்களில், 3,589 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு, கடந்த, 9ம் தேதி, எழுத்து தேர்வு நடந்தது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேற்று முன்தினம் முதல், நேர்முகத் தேர்வு துவங்கியது. நேற்று, பெய்த பலத்த மழையால், நேர்முகத் தேர்வில் பங்கேற்பதில் சிரமம் உள்ளதாக, விண்ணப்பதாரர்கள் சிலர் தெரிவித்தனர். மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு, போதிய இடமின்மை காரணமாக, நேற்று முதல் வரும், 1ம் தேதி வரை நடக்கும், நேர்முக தேர்வு, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும், நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.