பொள்ளாச்சி: மூன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய, கல்யாண மன்னனை, போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த, ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர், புஷ்பவள்ளி. இவரது கணவர், சாலை விபத்தில் இறந்தார். சில ஆண்டுகள் கழித்து, பரமக்குடியை சேர்ந்த செல்வேந்திரன், 40, என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன், வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருட்களையும், பணத்தையும் எடுத்துக் கொண்டு செல்வேந்திரன் தப்பினார். புஷ்பவள்ளி கொடுத்த புகாரின் படி, பொள்ளாச்சி தாலுகா போலீசார் தேடி வந்தனர். விசாரணையில், சரவணம்பட்டியில், வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்தி வந்தது தெரிந்து, போலீசார் இவரை கைது செய்து, பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைத்தனர். போலீசார் கூறுகையில், ""செல்வேந்திரனை, சரவணம்பட்டியில் கைது செய்த போது, பிரியா என்ற பெண்ணுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் சேலத்தில் திருமணம் நடந்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன், பவானி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால், பவானியை கொலை செய்துள்ளார்; ஜாமினில் வெளியே வந்தவர் தலைமறைவானார். தற்போது, கைது செய்யப்பட்டுள்ளது குறித்து, திருவாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.