ஆத்தூர்: ஆத்தூர் அருகே, லாரி மீது, கார் மோதி விபத்துக்குள்ளானதில், ராசிபுரம் நகராட்சி கவுன்சிலர் உட்பட இருவர் பலியாயினர்; பள்ளி சிறுவர், சிறுமியர் உட்பட, 11 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி, ஆறாவது வார்டு சுயேட்சை கவுன்சிலர் செல்வக்குமார், 35. இவர், ராசிபுரம் நடுகாலனி, சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்த, பள்ளி சிறுவர், சிறுமியர் உட்பட, 13 பேருடன், "டாயோட்டோ இன்னோவா' காரில், சென்னை, வண்டலூர் வன உயிரியியல் பூங்காவுக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், தலைவாசல் அடுத்த நத்தக்கரை, "டோல்கேட்' அருகே, சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது, கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் ஓட்டி வந்த, ராசிபுரம் நகராட்சி கவுன்சிலர் செல்வக்குமார், பழனிசாமி, 30, ஆகியோர், காருக்குள் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த நிலையில், காருக்குள் சிக்கிக் கொண்ட சேகர், 32, மற்றும் பள்ளி சிறுவர், சிறுமியர் உட்பட, 11 பேரை, ஹைவே பேட்ரோல் போலீசார் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தலைவாசல் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். கவுன்சிலர் செல்வக்குமார், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், ராசிபுரத்தை சேர்ந்த பெயின்ட் அடிக்கும் தொழிலாளர்கள், தங்களுடைய குழந்தைகளுக்கு, அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், சென்னைக்கு சுற்றுலா சென்றனர். அப்போது, விபத்தில் சிக்கியது தெரியவந்தது. சிறுவர், சிறுமியரை தவிர, மற்ற அனைவரும், குடிபோதையில் இருந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.