Advertisement
மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை தட்டி கேட்ட தொழிலாளி சுட்டு கொலை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012,00:06 IST

திருவண்ணாமலை: மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை, தட்டி கேட்ட தொழிலாளியை, சுட்டு கொன்ற முன்னாள் ராணுவ வீரரை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த சு.வாளவெட்டி கிராமத்தைச் சேர்ந்த, கட்டட தொழிலாளி இளங்கோ, 54. இவரது மகள் சாந்தி, 16, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ப்ளஸ் 1 படித்து வருகிறார். சாந்தி நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, இவரது வீட்டின் அருகே வசிக்கும், முன்னாள் ராணுவ வீரர் திருமுகம், 45, சாந்தியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். சாந்தி கூச்சலிட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த திருமுகம் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து, நேற்று காலை, 9 மணி அளவில் சாந்தியின் தந்தை இளங்கோ, திருமுகத்தை தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த திருமுகம், துப்பாக்கியால், இளங்கோவை சுட்டார். இதில், படுகாயமடைந்த இளங்கோ திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இறந்தார். திருமுகத்தின் மனைவி சித்ரா, திருவண்ணாமலை மகளிர் போலீஸில் பணிபுரிகிறார். திருமுகம் ஏற்கனவே அப்பகுதி பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே போலீஸில் புகார் கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருமுகத்தை கைது செய்ய கோரி, திருவண்ணாமலை - கடலூர் சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பொது மக்களை அமைதிப்படுத்தி, அனுப்பினர். திருமுகத்தை கைது செய்தனர். மறியலால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Arm.Abdul Kadar - sattankulam ,இந்தியா
30-டிச-201215:09:33 IST Report Abuse
Arm.Abdul Kadar நாளைக்கே இவன் வெளி வந்து விடுவான் .100% SURE ,இந்திய சட்டம் அப்படி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.