கமுதி: ராமநாதபுரம், கமுதி அருகே மரத்தில் கார் மோதி, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் கருணாகரன் (அ.தி.மு.க.,) உட்பட மூவர் பலியாகினர். முதுகுளத்தூர் ஒன்றிய துணை தலைவராக இருந்த கருணாகரன், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளராகவும் பதவி வகித்தார். நேற்று, "பொலிரோ' காரில், கமுதியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு, இவர் உட்பட மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். கீழச்சாக்குளத்தை சேர்ந்த டிரைவர் நாராயணன் ஓட்டினார். மதியம் 2.30 மணிக்கு, கிளாமடத்துப்பட்டி அருகே, கார் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓர பனை மரத்தில் மோதியது. இதில் நாராயணன், பொசுக்குடி கண்ணுச்சாமி காரிலேயே நசுங்கி இறந்தனர். ஆபத்தான நிலையில் கருணாகரன், மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இவர், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பதினெட்டாம்படியானின் மகன்; முருகன் எம்.எல்.ஏ., வின் சகோதரர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.