மதுரை: நாகர்கோவில் அருகே லாரி மோதி, கார் டிரைவர் பலியானதற்கு 6 லட்சத்து 19 ஆயிரத்து 742 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பாய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் வின்சென்ட். இவர் 2007 ஜன.,3 ல் திருநெல்வேலி-நாகர்கோவில் ரோட்டில் கார் ஓட்டிச்சென்றார். ரோட்டின் இடது புறம் விரிவாக்கப் பணி நடந்தது. இதனால், வலது பக்கம் காரை ஓட்டிச்சென்றார். அய்யனேரி அருகே, எதிரே வந்த லாரி மோதியதில் வின்சென்ட் இறந்தார். இழப்பீடு கோரி, எஸ்.ஜெயசூர்யா என்பவர் கன்னியாகுமரி மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
"யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி' நாகர்கோவில் கிளை, 6 லட்சத்து 19 ஆயிரத்து 742 ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இன்சூரன்ஸ் கம்பெனி, மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தது. நீதிபதி பி.தேவதாஸ்: லாரி டிரைவர் வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. ரோட்டின் இடது பக்கம், விரிவாக்கப் பணி நடந்ததால், வேறுவழியின்றி கார் டிரைவர் வலது பக்கம் ஓட்டிச் சென்றுள்ளார். அவர் மீது தவறில்லை. கீழ் கோர்ட் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.