கோபிசெட்டிபாளையம்: கோபியை அடுத்த அரக்கன்கோட்டை அருகே, பஞ்சராகி நின்ற வேன் மீது, லாரி மோதிய விபத்தில், மூவர் பலியாயினர்; நான்கு பேர் படுகாயமடைந்தனர். ஈரோடு மாவட்டம், வெள்ளித் திருப்பூரில் இருந்து, பி.வி.சி., பைப் ஏற்றிய ஐஷர் வேன், பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. மாத்தூரை சேர்ந்த பிரான்சிஸ், 26, வேனை ஓட்டி சென்றார். செல்வம், 29, சம்பத், 30, ஆகியோர் உடன் சென்றனர். அதிகாலை, 2:00 மணி அளவில், அரக்கன்கோட்டை மூலவாய்க்கால் அருகே, வேன் பஞ்சரானது. மாற்று டயர் இன்றி, சாலையோரத்தில் வேனை நிறுத்தி, டிரைவர் பிரான்சிஸ் மற்றும் செல்வம், வேனுக்கு அடியிலும்; சம்பத், வேனின் மேல் பகுதியிலும் படுத்துக் கொண்டனர். கர்நாடக மாநிலம் ஒசகொட்டாவில் இருந்து, மேட்டுபாளையத்திற்கு, உருளை கிழங்கு லோடு ஏற்றிய லாரியை, தர்மபுரி மாவட்டம், தொப்பூரை சேர்ந்த முருகன், 22, ஓட்டி வந்தார். கிளீனர் ஸ்ரீராம், 21 மற்றும் இருவர், லாரியில் வந்தனர். அதிகாலை, 2:30 மணிக்கு அதிவேகத்தில் வந்த லாரி, நின்றுக் கொண்டிருந்த வேன் மீது பயங்கரமாக மோதிய வேகத்தில், 30 அடி தூரத்துக்கு வேனை இழுத்து சென்று, சாலையோர பள்ளத்தில் கவிழ்த்தது. வேனுக்கு அடியில் படுத்திருந்த பிரான்சிஸ், செல்வம் உடல் சிதறி, சம்பவ இடத்திலேயும்; லாரியில் இருந்த கிளீனர் ஸ்ரீராம், இடிபாடுகளில் சிக்கியும் பலியாயினர்; மற்ற நான்கு பேர் படுகாயமடைந்தனர். விபத்தின் போது பயங்கரம் சத்தம் கேட்டு, அப்பகுதியினரும், அவ்வழியாக சென்றவர்களும் காயமடைந்தவர்களை மீட்டனர். பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், காயமடைந்தவர்களை, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுக்குள் சிக்கிய, கிளீனர் ஸ்ரீராம் உடலை மீட்க முடியவில்லை. அப்பகுதியை சேர்ந்த ஜே.சி.பி., உரிமையாளர் ஒருவர், விபத்தை பார்த்து, ஜே.சி.பி.,யை கொண்டு வந்தார். வேனில் கயிறு கட்டி இழுத்த போதும், நகரவில்லை. வேனில் அதிகளவில் பைப் இருந்ததால், அதை கைவிட்டு, லாரியில் இருந்த உருளை கிழங்கு லோடை, பொது மக்கள் அகற்றினர். அதைத் தொடர்ந்து, லாரியில் கயிறு கட்டி இழுத்து, இடிபாட்டில் சிக்கிய உடல் மீட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.