Court orders private concern to compensate petitioner | கடனை செலுத்திய பின்பும் வாடிக்கையாளருக்கு தொல்லை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடனை செலுத்திய பின்பும் வாடிக்கையாளருக்கு தொல்லை

Added : டிச 30, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: கடன் தொகையை செலுத்தியும், தொல்லை செய்ததால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாருக்கு நஷ்டஈடு வழங்க, ஜி.ஈ., நிதி நிறுவனத்திற்கு, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அடையாறு, சாஸ்திரி நகரைச் சேர்ந்த, தேசிங்கு என்பவர், அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலை, ஜி.ஈ., நிதி நிறுவன நிர்வாகத்தின் மீது, நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நிதி நிறுவனத்தின், பண அட்டை வசதியை பயன்படுத்தி வந்தேன். அதோடு, தனி நபர் கடனும் பெற்றிருந்தேன். பண அட்டை கணக்கிற்கான தொகை முழுவதையும், 2009 மே மாதம், 6ம் தேதி கட்டினேன். தனி நபர் கடனுக்கான தவணையை சரிவர செலுத்த முடியாததால், குறிப்பிட்ட தொகையை செலுத்தி, கடனை முடித்துக் கொள்ளுமாறு கூறினர். அதன்படி, டிச., 8ம் தேதி, 2,000 ரூபாய் செலுத்தினேன். திடீரென, தனி நபர் கடனுக்கான, 8,880 ரூபாயை செலுத்துமாறு, சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம், "நோட்டீஸ்'அனுப்பினர். கடன் தொகையை செலுத்தி விட்டதாக, சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்தேன். அதன் பிறகும், 2011 மார்ச், 9ம் தேதி, கடன் தொகையாக, 22 ஆயிரத்து 861 ரூபாய் மற்றும் ஏப்ரல் 11ம் தேதி, பணத்தை பெறுவதற்கான, சமாதான நடவடிக்கைக்கு, 23 ஆயிரத்து 482 ரூபாய் செலுத்துமாறு, நோட்டீஸ் அனுப்பினர். முறையற்ற வியாபார உத்தியை கையாண்டு, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு நஷ்டஈடாக, 2 லட்ச ரூபாய் தர வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, சென்னை (வடக்கு) நுகர்வோர் கோர்ட் நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர் தயாளன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு: மனுதாரர், கடன் தொகையை செலுத்திய பிறகும், அவரை பணம் செலுத்த சொன்னது, நிச்சயம் முறையற்ற வணிக யுக்தி தான். இதற்கு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம், மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும், வழக்கு செலவாக, 5,000 ரூபாயும் தர வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை