சென்னை: கடல் அலையில் சிக்கி உயிர் இழந்த, மென் பொருள் பொறியாளரின் உடல், பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த மென் பொருள் பொறியாளர் நியோட்டர் டிவிட்சி, 37. நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட, சென்னை வந்த இவர், டிச., 27ம் தேதி, சென்னையை அடுத்த, காட்டுப்பள்ளி, காளஞ்சி கடல் பகுதியில், நண்டர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது, கடல் அலையில் சிக்கி இறந்த, நியோட்டர் டிவிட்சியின் உடல், நேற்று, பிரேத பரிசோதனைக்காக, சென்னை, ராஜிவ்காந்தி, அரசு பொது மருத்துவமனைக்கு, கொண்டு வரப்பட்டது. நியோட்டர் டிவிட்சியின் உடலை, பிரேத பரிசோதனை செய்ய, ஜெர்மன் தூதரகத்தில் இருந்து, ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. காட்டூர் போலீசாரிடம் இருந்து விண்ணப்பம் வந்ததும், இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.