ராமநாதபுரம்: மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக, 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த, பார்த்திபனூர் பெண் போலீஸ் சண்முகப்பிரியா உட்பட இருவருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர், செந்தில்குமார்; சகோதரி செல்வி. கமுதி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் போலீசாக இருந்தார். இவருடன் வேலை பார்த்த, பார்த்திபனூரை சேர்ந்த சண்முகப்பிரியா, "என் சகோதரர் நெல்லிக்குமார், வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் தொழில் செய்து வருகிறார். உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்' என, செல்வியிடம் கூறினார். செல்வி, தனது சகோதரர் செந்தில்குமாரை, மலேசியா அனுப்ப முடிவு செய்தார். இதன்படி, 2005 ல், சண்முகப்பிரியா சகோதரர் நெல்லிக்குமாரிடம், 80 ஆயிரம் ரூபாயை, செல்வி கொடுத்தார். ஆனால், வேலைக்கு அனுப்பாமல் ஏமாற்றினார். ராமநாதபுரம் குற்றப்பிரிவில், செந்தில்குமார் புகார் கொடுத்தார். பரமக்குடி கோர்ட்டில் நடந்த இவ்வழக்கில், சண்முகப்பிரியா, நெல்லிக்குமாருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட் ரேவதி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.