செங்கல்பட்டு: தொழிற்சாலைக்கு, தடையில்லா சான்றிதழ் வழங்க, 3,000 ரூபா# லஞ்சம் வாங்கிய, தீயணைப்பு அலுவலரை, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செ#தனர். தாம்பரத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 51. மதுராந்தகம் தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். மதுராந்தகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை நிறுவனம், தீயணைப்பு சாதனங்கள் முறையாக பொருத்தப்பட்டு உள்ளது என, தீயணைப்பு நிலையத்திலிருந்து சான்றிதழ் பெற்று உள்ளது. அந்த சான்றிதழை ஆண்டுதோறும் புதுப்பித்து, தொழிற்சாலை நடத்த தடையில்லா சான்று பெற வேண்டும். அதை பெறுவதற்காக, தொழிற்சாலை நிர்வாகம் முறைப்படி தீயணைப்பு நிலையத்தை அணுகினர். அங்கு, பணியிலிருந்த தட்சணாமூர்த்தி, தடையில்லா சான்றிதழ் வழங்க, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அதிர்ச்சி அடைந்த நிர்வாகம், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தது. துணை காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், ஆய்வாளர் கணேசன், ஆகியோர் விசாரித்தனர். பின், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, தொழிற்சாலை ஊழியரிடம் கொடுத்து, தட்சணாமூர்த்தியிடம் வழங்கும்படி கூறினர். அவரும், பணத்துடன் தட்சணாமூர்த்தியை தொடர்பு கொண்டார். அவர், தாம்பரத்தில் உள்ள உணவு விடுதிக்கு வரும்படி கூறினார். நேற்று காலை, 7:00 மணிக்கு, உணவு விடுதிக்கு வந்த தட்சணாமூர்த்தி, தொழிற்சாலை ஊழியரிடமிருந்து லஞ்சமாக, 3,000 ரூபாய் பெற்றார். அப்போது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி கலைமதி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.