கம்பம்: தேனி, கூடலூர் வனப்பகுதியில் மான் வேட்டையாடி, இறைச்சியை பங்கிட்டி கும்பல், வனத்துறையினரை கண்டதும் ஓடியது. ஜீப், துப்பாக்கி, தோட்டாக்களை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கம்பம், கூடலூர் வனப்பகுதிகளில் மான், காட்டுப்பன்றிகள், கேளை ஆடுகள், முயல்கள் அதிகம். உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, மேகமலை வன உயிரின சரணாலயம், ஆறு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது. அதற்கு பிறகு தான், வன உயிரினங்கள் வேட்டையும் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் வேட்டையாடியவர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. குற்றவியல் நடவடிக்கை எடுத்திருந்தால், நிலைமை மோசமாகி இருக்காது. தற்போது, தினமும் வேட்டை அரங்கேறி வருகிறது. நேற்று காலை, கூடலூர் கழுதைமேட்டுகளம் என்ற பகுதியில், உதவி வனப்பாதுகாவலர் சத்தியமூர்த்தி, வனவர் பெத்தனசாமி, காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது, சிலர் மிளா மான் இறைச்சியை பங்கிட்டு கொண்டிருந்தனர். வனத்துறையினரை பார்த்ததும், வேட்டையாடிய கும்பல் தப்பியோடியது. வேட்டைக்கு பயன்படுத்திய ஜீப், மான் தலையுடன் இறைச்சி, ஒற்றைக்குழல் துப்பாக்கி, 13 தோட்டாக்களை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்களை பிடிக்க, தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக, வனத்துறையினர் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.