Fake police arrested in Thiruvannainallur | கம்பி எண்ணுகிறார் 'டுபாக்கூர் போலீஸ்'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கம்பி எண்ணுகிறார் 'டுபாக்கூர் போலீஸ்'

Added : டிச 30, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில்,போலீஸ் என, மிரட்டி வந்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்தவர் லோகநாதன், 52; தள்ளுவண்டியில், பழம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை, அவரிடம் பழம் வாங்கிய வாலிபர் ஒருவர், பணம் கொடுக்க மறுத்ததுடன், "நான் போலீஸ், என்னிடமா பணம் கேட்கிறாய்?' எனக் கூறி, அடையாள அட்டையை காண்பித்து மிரட்டியுள்ளார். அருகில் இருந்தோர்,போலீசுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், கிழக்கு மருதூரை சேர்ந்த, மாயவன் மகன் ஹரிகரன், 22, என்பதும், பல இடங்களில், போலீஸ் என, கூறி மிரட்டியதும், தெரியவந்தது. ஹரிகரனை கைது செய்து, அவரிடமிருந்த, போலியான அடையாள அட்டையை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை