ஓசூர்: அரசு உதவி பெறும் பள்ளியில், போலி மாற்றுச் சான்றிதழ் வழங்கிய இளநிலை உதவியாளர் மீது, தலைமை ஆசிரியர், போலீசில் புகார் செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அந்நியாளத்தில் அரசு உதவி பெறும் பள்ளியான, ஜான் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், மரியா மைக்கேல், 42, இளநிலை உதவியாளராக பணிபுரிகிறார். இவர், பள்ளி நிர்வாகத்துக்கு தெரியாமல், பலருக்கு, போலி மாற்றுச் சான்றிதழ் கொடுத்துள்ளதாக தெரிய வந்தது. இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன், 48, நடத்திய விசாரணையில், ஓராண்டுக்கு முன், சிக்கந்தர், 23, அந்தோணி ராஜ், 23, செந்தில், 24 ஆகியோர், இந்த பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்ததாக, போலிமாற்றுச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. போலி மாற்று சான்றிதழை பெற்றோர், ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர். போலி சான்றிதழ் வழங்கிய, மரியா மைக்கேல் மீது, தலைமை ஆசிரியர் ஸ்டீபன், தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.