சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில், சினிமா நடிகை புவனேஸ்வரி, விபசாரம் செய்தாரா என, நீதிபதி முன், சப்இன்ஸ்பெக்டர் சாட்சியம் அளித்தார். கடந்த, 2009ம் ஆண்டு, அக்.,27ல், சாஸ்திரி நகர் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில், இளம் பெண்களை வைத்து, சினிமா நடிகை புவனேஸ்வரி விபசாரம் செய்ததாக, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், அவருக்கு குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில், பண மோசடி மற்றும் சினிமா தியேட்டரில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த, சினிமா நடிகை புவனேஸ்வரியை, விபசார வழக்கு தொடர்பாக, சைதாப்பேட்டை பெருநகர, 4 வது கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என, அரசு வழக்கறிஞர் வேலுசாமி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, கடந்த 10ம் தேதி, போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்ட புவனேஸ்வரி, நீதிபதியிடம், "நான் விபசாரம் செய்யவில்லை' என, தெரிவித்தார். இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை,நேற்று முன் தினம், சைதாப்பேட்டை பெருநகர 4வது கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு முருகன் முன் வந்தது. அப்போது, விபசார தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தனஞ்செயன் ஆஜராகி, சாட்சியம் அளித்தார். அப்போது, "சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை புவனேஸ்வரி இருந்தார். அங்கு நெருக்கம் கொள்ள, 5,000 ரூபாய் கேட்டார்' என, தெரிவித்தார். இதையடுத்து, மற்ற சாட்சிகள் மீதான விசாரணையை, ஜன.,9ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.