E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நஷ்டஈடு வழங்க நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 டிச
2012
00:24

சென்னை: சென்னை, அடையாறு, சாஸ்திரி நகரைச் சேர்ந்த, தேசிங்கு என்பவர், அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலை, ஜி.ஈ., நிதி நிறுவன நிர்வாகத்தின் மீது, நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நிதி நிறுவனத்தின், பண அட்டை வசதியை பயன்படுத்தி வந்தேன். அதோடு, தனி நபர் கடனும் பெற்றிருந்தேன். பண அட்டை கணக்கிற்கான தொகை முழுவதையும், 2009 மே மாதம், 6ம் தேதி கட்டினேன். தனி நபர் கடனுக்கான தவணையை சரிவர செலுத்த முடியாததால், குறிப்பிட்ட தொகையை செலுத்தி, கடனை முடித்துக் கொள்ளுமாறு கூறினர். அதன்படி, டிச., 8ம் தேதி, 2,000 ரூபாய் செலுத்தினேன். திடீரென, தனி நபர் கடனுக்கான, 8,880 ரூபாயை செலுத்துமாறு, சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம், "நோட்டீஸ்'அனுப்பினர். கடன் தொகையை செலுத்தி விட்டதாக, சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்தேன். அதன் பிறகும், 2011 மார்ச், 9ம் தேதி, கடன் தொகையாக, 22 ஆயிரத்து 861 ரூபாய் மற்றும் ஏப்ரல் 11ம் தேதி, பணத்தை பெறுவதற்கான, சமாதான நடவடிக்கைக்கு, 23 ஆயிரத்து 482 ரூபாய் செலுத்துமாறு, நோட்டீஸ் அனுப்பினர்.முறையற்ற வியாபார உத்தியை கையாண்டு, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு நஷ்டஈடாக, 2 லட்ச ரூபாய் தர வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, சென்னை (வடக்கு) நுகர்வோர் கோர்ட் நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர் தயாளன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு: மனுதாரர், கடன் தொகையை செலுத்திய பிறகும், அவரை பணம் செலுத்த சொன்னது, நிச்சயம் முறையற்ற வணிக யுக்தி தான். இதற்கு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம், மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும், வழக்கு செலவாக, 5,000 ரூபாயும் தர வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.