திருத்தணி : திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, 33 வகையான அபிஷேகங்கள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபையாகும். ரத்தினசபை என்றழைக்கப்படும் இக்கோவிலில், ஆருத்ரா தரிசனம், நேற்று முன்தினம் நடந்தது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதையே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு ரத்தின சபாபதிப் பெருமான் ஸ்தல விருட்சத்தின் கீழ், புதிதாக நிர்மாணித்துள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா அபிஷேகம் விழா துவங்கியது.
தொடர்ந்து, கதம்பத் தூள், நெல்லிப் பொடி, வில்வப் பொடி, சாத்துக்குடி, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என, மொத்தம், 33 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர், சர்வ அலங்காரம் செய்யப்பட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நடராஜ பெருமான் ஆலமர பிரகாரம் வலம் வந்து கோபுர தரிசனம் நடந்ததும், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், வருவாய் துறை அதிகாரிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நேற்று மதியம் 1:00 மணியளவில் அனுக்க தரிசனம் நடந்தது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. தூரத்தில் அமர்ந்திருந்த பக்தர்களும், அபிஷேகத்தை காணும் வகையில், ஆங்காங்கே "டிவி'க்கள் வைக்கப்பட்டிருந்தன. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. அதிகாலை "தினமலர்' நாளிதழ் சார்பில், 2,000 பக்தர்களுக்கு வெண்பொங்கல், கேசரி வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் புகழேந்தி, தக்கர் ஜெய்சங்கர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். திருத்தணி ஏ.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.