Advertisement
பந்தலூர் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012,00:31 IST

பந்தலூர் : பந்தலூர் பஜாரில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பிரிவு) அலுவலர் டாக்டர் ரவி தலைமையிலான அதிகாரிகள், நேற்று காலை பந்தலூர் பஜாரில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரும்பாலான பேக்கரிகளில் காலாவதியான ஐஸ், பிஸ்கட், மிக்சர், விவரங்கள் இல்லாத
கலப்பட டீதூள் உள்ளிட்டவை விற்கப்பட்டு வந்தது தெரியவந்தது. முறையாக பராமரிப்பில்லாத பிரிட்ஜில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வைத்திருந்தது, ஓட்டல்களில் திறந்த வெளியில், சுகாதாரமற்ற சூழலில் உணவு சமைத்தது, அழுகிய காய்கறிகள், கழுவாத பாத்திரங்களில் உணவு தயாரிக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
டாக்டர் ரவி கூறியதாவது: பிப்ரவரி 4ம்தேதிக்குள், ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் விற்பனை செய்யப்படும் கடை உரிமையாளர்கள், எங்கள் துறை மூலம் உரிமம் பெறுவதும்; 1லட்ச ரூபாய்க்குள் வியாபாரம் செய்வோர் அனுமதி பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பந்தலூர் பகுதியில் வந்த புகாரை அடுத்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டத்தில், காலாவதி பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுப்பண்டங்கள் தயாரிப்பது தெரியவந்தது. முதல்கட்டமாக, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டுள் ளது. மறுமுறை ஆய்வின்போது இதே நிலை நீடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த புகாரை, கூடலூர் பகுதி பொறுப்பாளரிடம் 98659 55719 என்ற எண்ணிலோ, அல்லது 0423-2450088 என்ற எண்ணிலோ தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
kamarud - ooty,இந்தியா
30-டிச-201208:30:23 IST Report Abuse
kamarud இது மட்டுமல்ல பந்தலூர் சுற்று வட்டார பகுதி களில் அன்றாடம் மாறும் விலை பொருட்களுக்கு விலை குறைப்பதே இல்லை அதாவது தக்காளி 20 ரூ விற்றது இன்று 10 ரூ ஆகி இருக்கும் .....ஆனால் இங்கே 20 ரூகே விற்பார்கள் இதற்க்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்........
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.