ஊட்டி : ஊட்டியில், வாகனங்களை நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லாததால், சுற்றுலா பயணிகள் திணறி வருகின்றனர். ஊட்டியில் உள்ள பல்வேறு சுற்றுலா ஸ்தலங்களை கண்டு ரசிக்க, நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இவர்களுக்காக,
மாவட்ட சுற்றுலா நிர்வாகம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
எனினும், சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப வாகன நிறுத்துமிடங்கள் (பார்க்கிங்) அதிகரிக்கப்படவில்லை.
நகரின்
முக்கிய இடங்களான தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ், ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட்
உள்ளிட்ட சாலைகளில், இடவசதி இல்லாததால், வாகனங்களை தாறுமாறாக நிறுத்த
வேண்டிய அவலம் உள்ளது. இதனால், விபத்து அபாயமும் உள்ளது.
கார்
பார்க்கிங் வசதி ஏற்படுத்தி, சுற்றுலா பயணிகளின் சிரமத்தை போக்க வேண்டும்
என, பல்வேறு அரசியல் கட்சியினர், பொது மக்கள் வலியுறுத்தியும், எந்த
நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. பார்க்கிங் வசதி ஏற்படுத்த,
மாவட்ட நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஒரு சில இடங்களை
அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 5 கோடி ரூபாய் மதிப்பில், 800 வாகனங்கள்
நிறுத்தும் வசதியுடன் பார்க்கிங் வசதி ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம்
திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்தினால் சுற்றுலா
பயணிகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.