திருப்பூர் : திருப்பூர்
அருகேயுள்ள ஊத்துக்குளி, வடமுக காங்கயம்பாளையத்தில், தனியார் ஜவுளி பூங்கா
அமைக்கும் பணி நடந்து வருகிறது; அதில், 48 மெகா வாட் திறன் கொண்ட அனல்
மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள் ளது. இதற்கு, ஊத்துக்குளி ஒன்றியம்
பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செப்., மாதம்,
பொதுமக்கள், உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினர்.
அனல்மின் நிலையம்
அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மூன்று கட்டம் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
கடந்த வாரம், அனைத்து ஊர்களிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு, எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆர்.எஸ்., செங்கப்பள்ளி, குன்னத்தூர் உட்பட
பகுதிகளில், நேற்று அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்
அடைக்கப்பட்டிருந்தன. செங்கப்பள்ளி பகுதியில் ரோடு மற்றும் கடைகள் முன்,
கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்
சின்னசாமி
கூறுகையில், ""பொதுமக்களின் எதிர்ப்பை மீறி இங்கு அனல் மின் நிலையம்
அமைக்கக் கூடாது. ஒரு மாதம் அவகாசம் கொடுத்து, எங்களின் அடுத்த கட்ட
போராட்டங்களை ஒத்தி வைத்துள்ளோம் .மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்கு
இயந்திரங்கள் கொண்டு வருவது உட்பட பணிகள் நடந்தால், அதை தடுப்போம்,''
என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.