திருப்பூர் : பாதாள சாக்கடை கட்டுமான பணி காரணமாக, தாராபுரம் ரோட்டில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் - தாராபுரம் ரோட்டில், ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இதனால், ஒரு வழிப்பாதை அடைக்கப்பட்டு, தாராபுரத்திலிருந்து திருப்பூர் வரும் வாகனங்கள் வெள்ளியங்காடு வழியாக, சந்தைப்பேட்டை, பல்லடம் ரோடு வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், பஸ் ஸ்டாண்ட் , சங்கிலிப்பள் ளம் பாலம் வழியாக வழக்கம்போல் வாக னங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பணிகள் துவங்கி, குழிகள் தோண்டப்பட்டுள்ளன. போக்குவரத்து முக்கியத் துவம் வாய்ந்த இந்த ரோட்டில், மேற்கொள்ளப்படும் பணியை, குறைந்தளவு ஊழியர்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, கூடுதல் பணியாளர்களை கொண்டு பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.