திருப்பூர் : மா.கம்யூ.,
கட்சியின் மாநிலக்குழு கூட்டம், திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் திருமண
மண்டபத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் தங்கவேல்
தலைமை வகித்தார். தேசிய பொதுசெயலாளர் பிரகாஷ்காரத், தலைமைக்குழு உறுப்பினர் வரதராஜன், மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பேசினர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்துக்கு
கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் கிடைக்காதால், 14.5 லட்சம் ஏக்கர்
நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பா சாகுபடி, அழிந்துகொண்டிருக்கிறது.
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க, மத்திய அரசு 2,500 கோடி ரூபாய் ஒதுக்க
வேண்டும்.
ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயும், சாகுபடி செய்ய முடியாத
நிலத்துக்கு 10 ஆயிரம் ரூபாயும், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 10
ஆயிரமும், தற்கொலை செய்த விவசாயி குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாயும்
வழங்க வேண்டும்.
பருவமழை பொய்த்ததால், பல மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டள்ளது.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, நிவாரண பணிகளை தொடங்க வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டோருக்கு, விரைவு கோர்ட்களில் விசாரித்து, தண்டனையை விரைந்து வழங்க வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, ஜன., 4ல், மாவட்ட தலைநகரங்களில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மத்திய
அரசின் நவீன, தாரளமய பொருளாதார கொள்கைகளை கண்டித்து, மத்திய
தொழிற்சங்கங்கள் சார்பில் பிப்., 20 மற்றும் 21 தேதிகளில், நாடு தழுவிய
வேலைநிறுத்தம் நடைபெறும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.