திருப்பூர் : ""பெண்கள்
மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, கடும் தண்டனை வழங்க
வேண்டும்,'' என, கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில்
நிலவும் மின்வெட்டு, பருவமழை பொய்த்தது, காவிரியில் உரிய தண்ணீர்
கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை ஆகியவை குறித்து விரிவாக பேச, பிரதமர்
தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில், உரிய நேரம்
ஒதுக்கியிருக்க வேண்டும்.
ஆனால், இதை முறையாக கடைப்பிடிக்காததால், கண்துடைப்புக்காக, கூட்டம் நடத்தப்படுவது போல் உள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற செயல்களால், நாடு பின்னோக்கி செல்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அதில்,
ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். திறமையை மதிப்பிடாமல்,
அரசுப் பணிகளில் வகுப்பு வாரியாக ஒதுக்கீடு செய்வது, ஒட்டுமொத்த அரசுப்
பணிகளின் தன்மையை நிலைகுலைய செய்யும்.
எனவே, மத்திய அரசு, ஓட்டு வங்கி
அரசியலாக பார்க்காமல், நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், சட்ட மசோதாவில்
திருத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.