திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கொலை, வழிப்பறி உட்பட வழக்குகளில் தொடர்புடைய மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. திருப்பூர்,
தாராபுரத்தை சேர்ந்த இரு சக்கர வாகன ஷோரூம் உரிமையாளர் கோகுலை கடத்தி,
பணம் பறிக்க முயற்சித்தவர் ராஜாராம் 30; இவர் ஏற்கனவே, அதே பகுதியில்
பியூட்டி பார்லர் உரிமையாளர் மோகனா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்.
ஜாமினில் வெளிவந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடுமலையில்
வழிப்பறி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்லா பிச்சை 27, என்பவர் மீது
திருச்சி, கோவை, தேனி மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஏழு வழக்குகள் உள்ளன.
காங்கயம், காடையூரான் வலசில் விவசாயி பெரியசாமி மற்றும் அவர் மனைவி,
மாமியார் ஆகிய மூன்று பேரை கொலை செய்த சங்கர் கைது செய்யப்பட்டார்.
இவர்கள்
மூவரும், தற்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ""வழக்கில்
ஜாமின் பெற்று, சிறையிலிருந்து வெளியே வந்தால்,பொது அமைதிக்கு பாதிப்பு
ஏற்படும்;இதுபோன்ற செயல்களில் இனிமேல் வேறு யாரும் ஈடுபடக்கூடாது எனவும்
கருதி, இவர்கள் மூன்று பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என திருப்பூர் எஸ்.பி., அமித்குமார்சிங்
பரிந்துரைத்தார்.
இதன்டிப்படையில், கலெக்டர் கோவிந்தராஜ், இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த உத்தரவு, சிறையில் உள்ள மூவருக்கும் வழங்கப்பட்டது.