திருப்பூர் : திருப்பூரில்
சி.பி.சி.ஐ.டி., பிரிவு செயல்படத்துவங்கியுள்ளது. போலீஸ் கஸ்டடியில்
இறந்த மோகன்ராஜ் குறித்த வழக்கு விசாரணை தீவிரமாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் அமைக்கப்பட்டு நான்கு
ஆண்டுகளான நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருப்பூர்
மாவட்டத்தில் சி.பி.சி.ஐ.டி., பிரிவு துவங்கப்பட்டது. இதற்கென ஒரு
இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு எஸ்.ஐ., நியமிக்கப்பட்டனர். இதற்கான அலுவலகம்,
குமரன் ரோட்டில் உள்ள மாநகராட்சி குமரன் வணிக வளாகத்தில் வாடகை கட்டடத்தில்
அமைக்கப்பட்டது.
அலுவலகம் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும்,
இப்போது தான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. செயல்பாடுகளை சி.பி.சி.ஐ.டி.,
தெற்கு மண்டல எஸ்.பி., ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். கோவை சரக டி.எஸ்.பி.,
மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர், நெசவாளர் காலனியைச் சேர்ந்த செகன்ட்ஸ் பனியன்
வியாபாரி மோகன்ராஜ் கடந்த செப்., மாதம் 3ம் தேதி போலீஸ் விசாரணையின் போது மர்மமாக இறந்தார்.
ஆக., 31ம் தேதி பழனிசாமி என்ற பைனான்சியர் கொலை வழக்கு தொடர்பாக மோகன்ராஜ் உட்பட
சிலரிடம்
போலீசார் விசாரித்தனர். போலீஸ் ஸ்டேஷனில் தப்பியோடிய மோகன்ராஜ், சுவரைத்
தாண்டிக் குதித்த போது கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீசார் வழக்கு
பதிந்தனர்.
ஆனால், விசாரணை என்ற
பெயரில் போலீசார் அவரை தாறு
மாறாகத்
தாக்கியதால் தான் இறந்தார் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். விசாரணை
முறையாக நடத்த வேண்டும் என பல தரப்பினர் நடத்திய போராட்டம் காரணமாக இந்த
வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை துவங்கியுள்ளது.
தற்@பாது
திருப்பூரில் சி.பி.சி.ஐ.டி., அலுவலகம் துவக்கப்பட்டு @மாகன்ராஜ் இறந்த
வழக்கு விŒõரணை தீவிரமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.