திருப்பூர் : திருப்பூர் ஸ்போர்ட்ஸ் நியூ பவுண்டேசன் சார்பில், மாநில அளவிலான வாலிபால் போட்டி, நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது. திருப்பூர்
மாவட்ட வாலிபால் கழக தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்து, போட்டிகளை துவக்கி
வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தனித்தனியாக மோதும் இப்போட்டிகள்,
பகலிரவு ஆட்டங்களாக நடக்கிறது. நேற்று துவங்கிய ஆண்
களுக்கான "லீக்'
போட்டியில், திருச்சி ஆயுதப்படை, தமிழ்நாடு தபால் துறை - சென்னை, ஈரோடு
ஜே.ஜி., பாய்ஸ், திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை ( டீ
செட்), சிவகாசி சேண்ட்ஸ்பிரில், கோவை, மாருதி உடற்கல்வியல் கல்லூரி ஆகிய
ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன.
இன்று நடக்கும் பெண்கள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பீளமேடு, கிருஷ்ணம்மாள்
கல்லூரி,
வெள்ளக்கிணறு தடாகம், திருப்பூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன், கோபி
பி.கே.ஆர்., ஆகிய நான்கு அணிகள் மோதுகின்றன. அரையிறுதி மற்றும் இறுதி
போட்டிகள் இன்று நடக்கின்றன. மாலையில், பரிசளிப்பு விழா நடக்கிறது.
முன்னதாக, ஸ்போர்ட்ஸ் நியூ பவுண்டேசன் சேர்மன் பார்த்திபன் வரவேற்றார். நஞ்சப்பா பள்ளி
தலைமையாசிரியர் துரைசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.