திருப்பூர் : தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் தனியார் பஸ்களில் அதிக
கட்டணம் வசூலிப்பதால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து மதுரை, தேனி, கம்பம், திருநெல்வேலி, ராமேஸ்வரம், நாகர்கோவில், செல்லும் பஸ்கள் தாரா
புரம்,
ஒட்டன்சத்திரம் வழியாக செல்கின்றன. சில பஸ்கள் தாராபுரத்தில் 15
நிமிடங்களும், மற்றவை ஒட்டன்சத்திரத்திலும், மற்றவை வழியில் உள்ள
ஓட்டல்களிலும் நின்று செல்கின்றன.
இடையில் உள்ள ஸ்டாப்களில் பெரும்பாலான
அரசு பஸ்கள் நிற்பதில்லை. சாதாரண அரசு பஸ்களில் தாராபுரத்தில் இருந்து
ஒட்டன்சத்திரம் செல்ல 18 ரூபாய்; எக்ஸ்பிரஸ், பாயிண்ட்-டூ- பாயிண்ட்,
"நான்ஸ்டாப்' என்ற பெயரில் இயங்கும் பஸ்
களில் 21 ரூபாய் கட்டணமும்
வசூலிக்கப்படுகிறது. ஆனால், தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை
இயங்கும் தனியார் பஸ்களில் 24 ரூபாய் கட்டணம் கறக்கப்
படுகிறது.
பயணிகள் கூறியதாவது:
திருப்பூரில் இருந்து தாராபுரத்துக்கு
44
கி.மீ., அதற்கு பஸ்களை பொறுத்து 18 முதல் 20 ரூபாய் வரை கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. அதே அளவு, தூரம் மட்டுமே உள்ள தாராபுரம்-
ஒட்டன்சத்திரத்துக்கு
24 ரூபாய் கேட்கின்றனர். கேட்டால்,
"அரசு பஸ்கள் நின்று செல்லாத இடங்
களில் நாங்கள் நிறுத்துகிறோம்; அதனால், டைமிங் அதிகமாகிறது,' என்று பல காரணங்களை கூறுகின்றனர்.
தாராபுரம்
வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, தனியார் பஸ்களில்
வசூலிக்கப்படும், கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும். விதி
முறைகளை மீறும் பஸ்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.