அனுப்பர்பாளையம் : நாயை கட்டுப்படுத்த செய்யப்படும் அறுவை சிகிச்சை பெயிலியராகிறது என மாநகராட்சி மண்டல கூட்டத்தில் ஆளும் கட்சி கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.
திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல கூட்டம், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணனன் தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் சபியுல்லா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதம்: சந்திரசேகர்
(அ.தி.மு.க.,): பிளாஸ்டிக் ரெய்டின் வேகம் குறைந்துள்ளது; அரசியல் தலையீடு
இல்லாத போது, ஏன் வேகம் குறைந்துள்ளது. நாய் பிடிப்பதிலும் வேகம்
குறைந்துள்ளது. பல இடங்களில் மின் கம்பம் பழுதாகி மிகவும் மோசமாக உள்ளது.
ஆபத்து ஏற்படும்முன் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராம்மோகன்(உதவி பொறியாளர்): மின் பொறியாளரிடம் பலமுறை கூறப்பட்டுள்ளது. மின்கம்பம் பற்றாக்குறையாக இருப்பதாக
கூறுகின்றனர். ராமசந்திரன்
(நகர் நல அலுவலர்): மாநகரத்தில் 5 ஆயிரத்து 881 நாய் இருப்பதாக
கணக்கிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்ய நிதி கணக்கீடு
செய்யப்பட்டுள்ளது. முன் அனுமதி பெற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். மாரப்பன்
(மா.கம்யூ.,): வார்டில் இரண்டு நீர்த்தேக்க தொட்டியை இயக்குபவர்களுக்கு
பாதுகாப்பு அறை இல்லை. இரவு நேரத்தில் செல்ல அச்சப்படுகின்றனர்.
ஒருங்கிணைக்கப்பட்ட பகுதியில் குப்பை போட பாக்ஸ் வைக்கப்படாமல் உள்ளது;
தெரு விளக்கு மாற்றப்படாமல் உள்ளது.ராதாகிருஷ்ணன் (மண்டல தலைவர்):
நீர் தேக்க தொட்டியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அறை கட்டப்படும்.
சிதம்பரம்
(அ.தி.மு.க.,): தெரு நாய்களுக்கு öŒய்யப்படும் அறுவை சிகிச்சை நூற்றுக்கு
65 சதவீதம் பெயிலியராக விட்டது. டாக்டரிடம் கூறி சரியான முறையில் அறுவை
சிகிச்சை செய்ய வேண்டும். ரவிசந்திரன்(இ.கம்யூ): எனது வார்டில் பள்ளி
அருகில் குப்பை கொட்டுகின்றனர். மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கன்டெய்னர் வைக்க வேண்டும். எம்ராய்டரி கழிவுகளை ரோட்டில் கொட்டுபவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகை மருந்து அடிக்க போதிய இயந்திரம்
இல்லை. மண்டல தலைவர்: பள்ளி அருகில் கன்டெய்னர் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகர் நல அலுவலர்: புகை மருந்து அடிக்க 60 வார்டுக்கும் 60 இயந்திரம் வர உள்ளது. திருப்பூரில் 16 டன் மெட்ரிக் பிளாஸ்டிக் பறிமுதல் செய்துள்ளோம். ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; ரெய்டு தொடரும். பிளாஸ்டிக் இல்லா
மாநகராட்சியாக திருப்பூர் மாற்றப்படும்.
தலைவர்: பொங்கல் பண்டிகைக்கு
ரோட்டோரத்தில்
கரும்பு, வாழை, மஞ்சள், விற்பனை செய்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
பொங்கலுக்கு பின், குப்பைகளை வியாபாரிகளே எடுத்து செல்ல வேண்டும்.
சேகர் (அ.தி.மு.க.,): காலேஜ் ரோட்டில் பூங்கா அமைக்க 37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த பணி இன்னும் துவங்காமல் உள்ளது.
பாலசுப்பிரமணியம்(அ.தி.மு.க.,):
குப்பை எடுக்க வருவதில்லை. கூப்பிட்டால் சரியான பதில் இல்லை.
செட்டிபாளையம் மருந்தகத்தில் டாக்டர்கள் சரியாக வருவதில்லை.
தலைவர்: மருந்தகத்தை ஆய்வு செய்து டாக்டர் சரியாக வரவும், மருந்து பற்றாக்குறையில்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சுப்பிரமணியம்
(அ.தி.மு.க): சுகாதார பணி மிகவும் மோசமாக உள்ளது. மேயர், ஆணையரிடம்
கூறியும் நடவடிக்கை இல்லை. தண்ணீர் பந்தல் பகுதியில் கால்வாய் கட்டும் பணி
தாமதமாக நடக்கிறது. திலகர் நகர் பகுதியில் ரோட்டோரத்தில் மீன் கடை வைத்து
சுகாதார கேடு ஏற்படுத்துகின்றனர். உதவி கமிஷனர்: மீன் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஈஸ்வரன்
(அ.தி.மு.க.,): ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லை. எட்டு நாட்களுக்கு ஒரு
முறை குடிநீர் வருகிறது. 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டும்.
சின்னசாமி (அ.தி.மு.க.,): செல்லம்மா நகர், அம்மன் நகர் பகுதியில் புதிய "போர்வெல்' போட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.