திருப்பூர் :
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில், "கலையாஞ்சலி - 2012' கலைவிழா
நடந்தது.நுண்ணுயிரியல் துறையின் நுண்கலை மன்றம் சார்பில், மூன்று நாட்கள்
நடந்த அவ்விழாவில், பல போட்டிகள் நடந்தது; தனி நடனம், குழு நடனம், சிகை
அலங்காரம், சமையல் உள்ளிட்ட 10 பிரிவுகளில், மாணவியர் திறமையை
வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவியர் விவரம்:தனிநபர் நடனம்: திவ்யா
முதலிடம், சரண்யா இரண்டாமிடம், சாவித்திரி மூன்றாமிடம்.குழு நடனம்: சரண்யா
குழுவினர் முதலிடம், திவ்யா குழுவினர் இரண்டாமிடம், கீதா குழுவினர்
மூன்றாமிடம், பி.காம்., இரண்டாம் ஆண்டு மாணவி சுதாஸ்ரீ, ஆறுதல் பரிசு
பெற்றார்.
தனிநபர் பாடல்: ஈஸ்வரியம்மன் ரேவதி முதலிடம், ரெனிடா ஷெர்லி
இரண்டாமிடம், நந்தினி மூன்றாமிடம்.குழு பாடல் (மேற்கத்திய இசை):
அஷ்டலட்சுமி முதலிடம், சரண்யா இரண்டாமிடம்.குழு பாடல் ( பழைய பாடல்):
ஸ்ரீதுர்கா முதலிடம், ஜமுனா ராணி இரண்டாமிடம், சிவரஞ்சனி மூன்றாமிடம்.
கழிவுகளை பயன்படுத்தி, பொருட்கள் தயாரித்தல்: விஜயலட்சுமி முதலிடம், சேக் அசீனா இரண்டாமிடம், அஸ்சரி பாத்திமா நிஷா மூன்றாமிடம்.
மருதாணியிடுதல்:
சாந்தி முதலிடம், ஆர்த்தி இரண்டாமிடம், வகீதா பானு மூன்றாமிடம்.சிகை
அலங்காரம்: ஆதிரா நாயர் முதலிடம், தாரணி இரண்டாமிடம், மீனாஸ்ரீ
மூன்றாமிடம்.சமையல்: காயத்ரி முதலிடம், பேச்சியம்மாள் இரண்டாமிடம், ஹரி
பிரியா மூன்றாமிடம்.ரங்கோலி: சந்திரா முதலிடம், சுகன்யா மற்றும் பூங்கொடி
இரண்டாமிடம், தீபா மற்றும் தமிழ்செல்வி மூன்றாமிடம்.கல்லூரியில், நேற்று
நடந்த பரிசளிப்பு விழாவில், அமைச்சர் ஆனந்தன், வெற்றி பெற்ற மாணவியருக்கு
பரிசுகளை வழங்கி பேசினார். திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க
செயலாளர் முத்துரத்தினம், கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்ஸி பிலிப்,
நுண்ணுயிரியல் துறை தலைவர் கலையரசி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.