பொள்ளாச்சி : பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி சக்திபுரா- விரிவாக்க சேவைத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நெகமத்தில் நடந்தது.
சமுதாய மேம்பாட்டு திட்ட ஆலோசகர் நாகராஜன் வரவேற்றார்.
நெகமம் பேரூராட்சி தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் சிதம்பரம், டெங்கு காய்ச்சல், பரவாமல் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வீடுகளுக்கு, அருகில் குப்பை தேங்காமல் தடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு குடிநீர், மலைவேம்பு இலைச்சாறு ஆகியவற் றை பருக வேண்டும். இவற்றை தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு சாப்பிட வேண்டும், என, வலியுறுத்தப்பட்டது.
மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்வி நிறுவன உதவி பேராசிரியர் ஞானசேகர், வீடுகளில் காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
காய்கறி தோட்டம் அமைத்தால், தரமான காய்கறிகளை விளைவிக்க முடியும்.வேப்பம்புண்ணாக்கு, மண்புழு உரத் தை பயன்படுத்துவதால் செடிகள் செழிப்பாக வள ரும் என, தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பொதுமக்கள், பேரூராட்சி நிர்வாகத்தினர், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லூரி உதவி பேராசிரியர் முத்துகண்ணன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.