Advertisement
கொடைக்கானலில் பென்னிகுக்கின் நிலம் பேரனிடம் ஒப்படைக்க தியாகி கோரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012,00:49 IST

மதுரை: முல்லை பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் பென்னிகுக்கிற்கு சொந்தமான, கொடைக்கானலில் ஆக்கிரமிப்பில் உள்ள 21 ஏக்கர் பட்டா நிலத்தை மீட்டு, நினைவு சின்னம் அமைத்து பேரன் ஜான்சன்குக்கிடம் ஒப்படைக்க வேண்டும், என சுதந்திரப் போராட்ட தியாகி பூம்பாறை ஆர்.டி.கோவிந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர், முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: பொறியாளர் பென்னிகுக் 1841 ஜன.,15ல் பிறந்தார். அவரது 172வது பிறந்த நாளான 2013 ஜன.,15ல், தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் மணிமண்டபம் திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது பாராட்டத்தக்கது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பென்னிகுக்கிற்கு சொந்தமான 21 ஏக்கர் 35 சென்ட் நிலம் உள்ளது. இதற்கான பட்டா பென்னிகுக் பெயரில் உள்ளது. இந்நிலம் தற்போது தனியார் சிலரால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மணிமண்டபம் திறக்கப்படுப்படுவதை முன்னிட்டு, பென்னிகுக்கிற்கு சொந்தமான நிலத்தை மீட்டு, அங்கு நினைவு சின்னம் அமைத்து, அவரது பேரன் ஜான்சன்குக்கிடம் ஒப்படைக்க, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Berlioz Lyautey - paris,பிரான்ஸ்
30-டிச-201215:26:37 IST Report Abuse
Berlioz Lyautey நியாமான கோரிக்கை , பாராட்டவேண்டிய உண்மை ,ஆள்பவர்கள் கவனிக்க வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.