பொள்ளாச்சி : கேரளாவுக்கு காய்கறிகளோடு ரேஷன் அரிசியை ஆட்டோவில் கடத்த முயன்ற பெண்ணை, போலீசார் மடக்கிப் பிடித்தனர். பொள்ளாச்சி,
அழகாபுரி வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மகேஸ்வரி,39; இவர்கள்
இருவரும் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு, ஆட்டோவில் தினமும்
காய்கறிகளை ஏற்றிச் சென்று வியாபாரம் செய்துவிட்டு திரும்புவது வழக்கம். நேற்று,
உறவினரை பார்க்க கணவர் செல்வராஜ் வெளியூர் சென்றதால், மகேஸ்வரி மட்டும்
ஆட்டோவில் காய்கறிகளையும், 250 கிலோ ரேஷன் அரிசியையும் ஏற்றிக் கொண்டு
சென்றுள்ளார். பொள்ளாச்சி மேற்கு போலீசார், ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர். இதில்,
காய்கறிக்கு மத்தியில் தலா 75 கிலோ எடை கொண்ட 2 மூட்டைகளிலும், 100 கிலோ
எடை கொண்ட ஒரு மூட்டையிலும் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டி.என் 55 எம் 4297 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவையும், ரேஷன் அரிசியையும்
பறிமுதல் செய்து, மகேஸ்வரியை கைது செய்தனர்.
உணவுதடுப்பு குற்றப்புலனாõய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல், எஸ்.ஐ.கருணாநிதி ஆகியோர் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.