சீரான முறையில் மின்வினியோகம் கோரி ஒரு லட்சம் தந்தி அனுப்பும் போராட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை : கோவையிலுள்ள தொழில் அமைப்புகள் சார்பில், தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் சமச்சீராக மின்சாரம் வினியோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு ஒரு லட்சம் தந்தி அனுப்பும் போராட்டம் நேற்று துவங்கியது.
தமிழ்நாட்டில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் தினமும் 14 முதல் 16 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. இதில், கோவை மண்டலத்தில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர, தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மின்வெட்டு பிரச்னையால், இந்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
சென்னையில் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமல்படுத்தப்
படுகிறது. சென்னை உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சமச்சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையிலுள்ள 14 தொழில் அமைப்புகள் ஒன்று கூடி வலியுறுத்தி வருகின்றன.
இந்த அமைப்புகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு வகையான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு வருகின்றன.
கோவையில் கொடிசியா, கொசிமா, காட்மா, டாக்ட், இந்திய தொழில்வர்த்தக சபை, சீயா, டாக்மா உள்ளிட்ட அமைப்புகள் கூடி ஆலோசனை செய்தன.
கோவை மண்டலத்திலுள்ள இந்த அமைப்புகள் தமிழக முதல்வரின் கவனத்தை கவர முதல் கட்டமாக ஒரு லட்சம் தந்திகள் அனுப்ப முடிவு செய்துள்ளன.
அடுத்த கட்ட போராட்டமாக வரும் 30ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
சமச்சீரான மின் வினியோகம் வேண்டி முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நேற்று துவங்கியது.
தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் சங்கங்கள் கோவையில் டிச.,8ம் தேதி கூடி மின்தடை நேரத்தை தமிழகம் முழுவதும் சீராக செயல்படுத்த வேண்டி முதல்வர், மின்துறை அமைச்சர், மின்வாரிய சேர்மன் ஆகியோருக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
சென்னை தவிர தமிழ்நாட்டில் இதர பகுதிகளில் தொடரும் பதினான்கு மணி நேர மின்தடை பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன.
தொழில்கள் நலிவடையாமல் இருக்க உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகம் முழுவதும் பகிர்ந்தளிக்கவும், சீராக மின்தடையை அமல்படுத்தவும் கோரி தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து சங்க உறுப்பினர்களும் மின் நுகர்வோர்களும் தமிழக முதல்வருக்கு டிச.,28 முதல் 31ம் தேதி வரை
லட்சக்கணக்கான தந்திகள் அனுப்ப முடிவு செய்துள்ளன.
போராட்டத்தின் முதல் கட்டமாக நேற்று கொடிசியா, கொசிமா, காட்மா போன்ற அமைப்புகள் பல ஆயிரம் தந்திகளை முதல்வருக்கு அனுப்பின.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்