அன்னூர் : மூன்று
மாவட்டங்களில், கோவில் உள்ளிட்ட ஏழு இடங்களில் திருடிய வாலிபர் அன்னூரில்
கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 32 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
அன்னூர், பள்ளிவாசல் வீதியில் நாகமணி என்பவர் வீட்டில் கடந்த 16ம் தேதி பதினான்கரை சவரன் நகைகள் திருட்டு போனது. தென்னம்பாளையம் ரோட்டில், சண்முக சுந்தரம் வீட்டில் கடந்த ஆக., மாதம் 10 சவரன் நகை திருட்டுப் போனது. அன்னூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நேற்று
முன்தினம் இரவு 10.00 மணிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ்
தலைமையில், போலீசார் அன்னூர் பஸ் ஸ்டாண்டில் சந்தேகிக்கும் வகையில்
சுற்றித்திரிந்த நபரை விசாரித்தனர்.
விசாரணையில், அவர் பாலாஜி, 25, திருச்சி, ஜியேபுரத்தை சேர்ந்தவர். கடந்த ஓராண்டாக பல்லடம், மகாலட்சுமி நகரில் வசிப்பது தெரிந்தது. தொடர்ந்து
நடத்திய விசாரணையில், பாலாஜி, கதவுகரை அம்மன் கோவில், உப்பிலிபாளையம்,
மருதகாளியம்மன் கோவில், கணபதிபாளையம், சக்தி மாரியம்மன் கோவில்,
கிட்டாம்பாளையம், பழனி ஆண்டவர் கோவில், வடுகபாளையம் சக்தி மாரியம்மன்
கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களில் தங்க தாலி, தங்க பொட்டு, வெள்ளி வேல்
திருடியது தெரியவந்தது. மேலும் அன்னூரில் நாகமணி, சண்முக சுந்தரம் வீடுகளில் இருபத்து நான்கரை சவரன் நகைகளை திருடியது தெரிந்தது.
பல்லடம்,
மகாலட்சுமி நகரிலுள்ள பாலாஜி வீட்டிலிருந்து 32 சவரன் நகைகள், ஒரு கிலோ
வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.
6.50 லட்சமாகும்.
போலீசார் கூறுகையில்,""பாலாஜி கடந்த ஆண்டு சரவணம்பட்டியில் ஆறு இருசக்கர வாகனங்களை திருடியுள்ளார். கரூர் மாவட்டம், மாயனூரில் ஒரு வீட்டில் திருடியது என மூன்று மாவட்டங்களில் 11 வழக்குகள் உள்ளன. அன்னூர்
வந்தபோது சிக்கினார். போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கரூர் மற்றும்
கருமத்தம்பட்டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்,'' என்றனர்.
பாலாஜி மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கைப்பற்றப்பட்ட நகைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.