சத்திரப்பட்டி: " விசைத்தறிகள் நாளை (டிச.,31) முதல், காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுப்பட உள்ளதாக, பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சத்திரப்பட்டி வட்டார சிறுவிசைத்தறி பேண்டேஜ்துணி உற்பத்தியாளர்கள் கூட்டம், தலைவர் மாத்தூரன் தலைமையில் நேற்று இரவு நடந்தது. துணைத்தலைவர் பாண்டியராஜ், செயலாளர் நட்சத்திர திலகம் முன்னிலை வகித்தனர். சத்திரப்பட்டி பேண்டேஜ் உற்பத்தியாளர் சங்கம், ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்கம் இணைந்து, தங்களுக்கு கொடுக்கும் டீசல் செலவு தொகையை, முழுமையாக வழங்கவேண்டும். ஜெனரேட்டர் பராமரிப்பு செலவும் முழுமையாக வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை முதல் விசைத்தறிகளை இயக்குவதில்லை என, முடிவு செய்யப்பட்டது. பொருளாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.இந்த சங்கத்தில் 300 விசைத்தறி கூடங்கள், 3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.