கம்பம்: தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு, அதிகளவில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் செல்வதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கம்பமெட்டு ரோட்டில், நேற்று இரவு முதல், ஒரு வழிப்பாதை நடைமுறைக்கு வந்துள்ளது. மாதந்தோறும் முதல் ஐந்து நாட்கள் ஐயப்பன் கோயில் நடைதிறந்து பக்தர்களை அனுமதிக்கின்றனர். இருந்த போதும், கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல பூஜை. மகரஜோதிக்கு அதிக பக்தர்கள் திரள்கின்றனர். தமிழகத்தில் இருந்து பெரும்பாலான வாகனங்கள், கம்பம், செங்கோட்டை வழி செல்கின்றன. இந்த ஆண்டு, இரவு நேரங்களில் வினாடிக்கு ஒருவாகனம் என்ற கணக்கில் செல்கின்றன. சபரிமலை வாகனங்களால், கம்பத்தில் இருந்து நெரிசல் ஆரம்பமாகிறது. குமுளி மலைப்பாதையில், இரவில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, குமுளி மலைப்பாதையை, ஒருவழிப்பாதையாக மாற்றினர். நேற்று இரவு 10 மணி முதல், கம்பமெட்டு ரோட்டில், சபரிமலை வாகனங்களை திருப்பி விட்டனர். சபரிமலையில் இருந்து வரும் வாகனங்கள் மட்டும், குமுளி மலைப்பாதையில் அனுமதிக்கப்படும். கம்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் கூறியதாவது: குமுளி மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலை குறைக்க, சில நாட்களுக்கு முன் கனரக வாகனங்களை கம்பமெட்டு ரோட்டில் திருப்பி விட்டோம். புத்தாண்டிற்கு பின், நடை திறக்கப்படும்; வாகன நெரிசல் அதிகரிக்கும். சபரிமலை செல்லும் வாகனங்களை, கம்பமெட்டு ரோட்டில் திருப்பி விட்டுள்ளோம். பக்தர்கள் கம்பம் மெட்டில் இருந்து ஆமையாறு, புளியன்மலை, கட்டப்பனை, ஏலப்பாறை, குட்டிக்கானம், முண்டகயம் வழி எரிமேலி செல்ல வேண்டும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.