சென்னை: "இந்திய அணியில் இடம்பெற்றுள்ள, இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்,'' என, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா, பாக். அணிகள் மோதும், முதலாவது ஒரு நாள் கிரிக்கெட், சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ., சிதம்பரம் மைதானத்தில், இன்று காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. இச்சூழலில், சென்னையில் நேற்று முதல், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கிரிக்கெட் போட்டி நடக்குமா? என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில், இரு அணி கேப்டன்களும், ஒரு நாள் போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்தனர். பின், இந்திய அணியின் கேப்டன் தோனி நிருபர்களிடம் கூறியதாவது: சேப்பாக்கத்தில் எனது தலைமையிலான அணி, பாகிஸ்தானுக்கு எதிராக, முதன் முறையாக களம் இறங்குகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், ஆரவாரமும் இருக்கும். சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு அணிக்கு இழப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இளைஞர்களுக்கு அவர் வழி விட்டுள்ளார். இளம் வீரர்கள் இந்திய அணியின் வெற்றிக்காக, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என, நம்புகிறேன். இவ்வாறு, தோனி கூறினார். பாக்.,கேப்டன் மிஸ்பா உல்-ஹக் கூறுகையில், "டெண்டுல்கர் இல்லாதது இந்தியாவிற்கு இழப்பே தவிர, எங்களுக்கு இல்லை; பேட்டிங், பௌலிங், பீல்டிங் என, நாங்கள் எல்லா திறமைகளையும் வெளிப்படுத்துவோம்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.