ராஜபாளையம்: "நம்மை சுற்றி நடப்பதை புரிந்துகொள்ள, நாளிதழ்களை படிக்கவேண்டும்,'' என, இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் கூறினார். விருதுநகர், ராஜபாளையம் என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் ஆண்டுவிழாவில் பங்கேற்ற அவர், பேசியதாவது:மாணவர்கள் மனப்பாடம் செய்யாமல், புரிந்து, அலசி ஆராய்ந்து படித்தால் தான், மனதில் நிற்கும். நம்மை சுற்றி நடப்பதை புரிந்துகொள்ள, நாளிதழ்களை படிக்கவேண்டும். இது, வேலைவாய்ப்பிற்கும் உதவும். கூடங்குளம் அணுமின்நிலையம், தேனி நியூட்ரினோ ஆய்வு என்பது, உயர்நிலை மற்றும் மேல்நிலை பாடத்தில், ஏற்கனவே நீங்கள் படித்தது. படிக்கும் பாடத்திற்கும், நாட்டின் தேவைக்கும் உள்ள இடைவெளியை, நீங்கள் தான் குறைக்கவேண்டும். அமெரிக்கா போக்குவரத்திலும், பிரிட்டன் மருத்துவத்திலும், ஜெர்மன் பொறியியலிலும் முன்னேறுகிறது. இந்தியாவின் முன்னேற்றம் இளைஞர்களின் திறமையில் தான் உள்ளது. மாணவர்கள் படித்த பாடத்தை, அன்றாட நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்க்க தெரியவில்லை. துவக்க பள்ளிகளிலே,அறிவியல் ஆய்வக வசதி இருக்கவேண்டும், என்றார். பாலிடெக்னிக் தாளாளர் சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். முதல்வர் பரமேஸ்வரி அறிக்கை வாசித்தார். ஹரீஸ் அகாடமி தாளாளர் இந்திரா பேசினார். பாலிடெக்னிக் அறக்கட்டளை உறுப்பினர் சதீஷ்குமார் ராஜா நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.