நங்கவள்ளி: வறட்சி காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் தேங்காய்களை கூடுதலாக கொள்முதல் செய்வதால், மண்டி உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், நங்கவள்ளி, ஜலகண்டபுரம், தாரமங்கலம், வனவாசி சுற்று பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டி உள்ளது. மண்டி உரிமையாளர், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் தேங்காய்களை கொள்முதல் செய்து கொண்டு வந்து, நார் உரித்து வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். சீசன் சமயங்களில் நங்கவள்ளி பகுதியில் இருந்து தினமும், ஐந்து லட்சம் முதல், பத்து லட்சம் தேங்காய் லாரி மூலம் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். தேங்காய் உற்பத்தி அதிகரித்ததால், மூன்று மாதத்துக்கு முன், முதல் ரக தேங்காய் ஒன்று, 4.50 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. விலை, 25 சதவீதம் வீழ்ச்சியடைந்ததால், விரக்தியடைந்த வியாபாரிகள் வெளிமாநிலங்களுக்கு தேங்காய் அனுப்பாமல் தங்கள் மண்டிகளில், 50 லட்சம் தேங்காய் வரை இருப்பு வைத்தனர். அந்த சமயத்தில் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் இருப்பு தேங்காய் அனைத்திலும் துளிர் விட்டு, அழுகி வீணாகியது. இதனால், மண்டி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. நடப்பாண்டு இறுதியில் வறட்சியால் தேங்காய் உற்பத்தி, 40 சதவீதம் வரை குறைந்தது. உற்பத்தி குறைந்த நிலையில், வடமாநிலங்களுக்கான தேவை அதிகரித்ததால் தற்போது முதல் ரக தேங்காய் விலை, 6 ரூபாயாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மண்டி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால், சில நாட்களாக நங்கவள்ளி பகுதி மண்டிகளில் இருந்து, தேங்காய் மூட்டைகளில் கட்டி, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.