விழுப்புரம் : கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்காக நடக்கவிருந்த நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது குறித்து விழுப்புரம் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் அலுவலக செய்திக்குறிப்பு:கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 3,589 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த 9ம் தேதி நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கான நேர்முக தேர்வு நேற்று முன் தினம் முதல் வரும் ஜன., 1ம் தேதி வரை சென்னையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட நேர்முகத் தேர்வு நேற்று முன் தினம் நடந்து முடிந்தது. இடையே பலத்த மழை காரணமாக, தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்க வரமுடியாத சூழல் கருதியும், சான்றிதழ் சரிபார்க்க போதிய இடமில்லாததாலும், நேற்று முதல் வரும் 1ம் தேதி வரை நடக்கவிருந்த நேர்முகத் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேர்வு நடைபெறும் தேதி, நேரம், இடம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.