போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி பொறியியல் கல்லூரி நிர்வாகி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி பொறியியல் கல்லூரி நிர்வாகி கைது

Added : ஆக 14, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி: போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி செய்ததாக தேனி உடையப்பா பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் கண்ணப்பன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.  தேனியிலுள்ள உடையப்பா பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் கண்ணப்பன். தேனி நகராட்சி முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இவர், 2003 ல் கல்லூரியில் பணியாற்றும் 24 பேருக்கு பழனிசெட்டிபட்டி வாசவி காலனியில் தலா இரண்டரை சென்ட் வீதம் நிலம் வாங்கி கொடுத்தார். பின் கல்லூரியில் வேலை செய்யும் 17 பேர் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் கண்ணப்பன், இந்த நிலத்தினை போலி ஆவணம் தயாரித்து தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். தன் பெயரில் இருந்த நிலத்தை வேறு நபருக்கு விற்பனை செய்து விட்டார். தற்போது இந்த நிலத்தின் மதிப்பு 40 லட்சம் ரூபாய். நிலத்திற்கு உரிமையாளரான கல்லூரி பணியாளர்கள் இது பற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையில் தனி போலீஸ் படை விசாரணை நடத்தி நிலமோசடி செய்ததாக கண்ணப்பன், மற்றும் கல்லூரி பணியாளர்கள் ராஜேஷ்கண்ணன், சுவாமிநாதன் ஆகியோரை கைது செய்தனர்.  மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X