Pune Rs .1.27 crore worth gold shirt with businessman | ரூ.1.27 கோடி மதிப்பு தங்க சட்டை புனே தொழிலதிபர் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ.1.27 கோடி மதிப்பு தங்க சட்டை புனே தொழிலதிபர் கொண்டாட்டம்

Added : ஜன 01, 2013 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ரூ.1.27 கோடி மதிப்பு தங்க சட்டை  புனே தொழிலதிபர்  கொண்டாட்டம்

புனே:புனே நகர தொழிலதிபர், 1.27 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க சட்டையை அணிந்து, புத்தாண்டை கொண்டாட உள்ளார். இதற்காக அவர், 3.25 கிலோ எடையில், புதிய தங்க சட்டையை உருவாக்கியுள்ளார்.

புனே அருகே உள்ள, பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர், தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி, சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்; தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

ஏற்கனவே, 5 கிலோ எடையில் கழுத்து, கை மற்றும் இடுப்பில், தங்க நகைகளை அணிந்து வலம் வரும் தத்தா, 2013ம் ஆண்டை புதுமையாக கொண்டாட விரும்பினார். இது வரை யாருமே செய்யாத வகையில், தங்க சட்டை அணிந்து, புத்தாண்டை கொண்டாட விரும்பிய அவர், அதற்காக 3.25 கிலோ தங்கத்தை கொடுத்தார்.

பதினைந்து பொற்கொல்லர்கள், 15 நாட்கள் உழைத்து, தங்க சட்டையை உருவாக்கியுள்ளனர். அதில், பொத்தான்கள், "ஸ்வரோவ்ஸ்கி' செயற்கை வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. வெறும் தங்க சட்டையாக இருந்தால், பார்க்க நன்றாக இருக்காது என்பதால், அந்த சட்டையில் ஆங்காங்கே தங்க மலர்களையும் வைத்துள்ளனர்.இந்த சட்டையின், இப்போதைய விலை, 1.27 கோடி ரூபாய். இதை, தேஜ்பால் ரங்கா என்ற பொற்கொல்லர் வடிவமைத்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு, தங்க சட்டை அணிய உள்ள தத்தா, இதற்கு முன்பே தங்கத்தால் பல பொருட்களை அனுபவித்து வருகிறார். தங்க பேனா, தங்க மொபைல் போன், கையின், பத்து விரல்களிலும், தங்க மோதிரங்கள் என, தங்கத்தால் ஜொலிக்கிறார்.இது பற்றி தத்தாவிடம் கேட்டபோது, அவர் கூறியது:

தங்கத்தின் மீது எனக்கு தணியாத தாகம் உண்டு. பலரும் புத்தாண்டை, புது கார், பொழுதுபோக்கு என கொண்டாட முடிவு செய்துள்ளனர். நான் சற்று வித்தியாசமாக, தங்க சட்டை அணிய முடிவு செய்தேன்.பாதுகாப்பு பற்றி கவலைப்படுகின்றனர்; நான் கவலைப்படுவதில்லை. ஏனெனில், நான் ஏற்கனவே, பாதுகாவலர்களை வைத்துள்ளேன். தங்க சட்டை அணியும் போது, கூடுதல் காவலர்களை பணியமர்த்தி கொள்ள உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
03-ஜன-201301:50:43 IST Report Abuse
GOWSALYA உண்மைதான் நண்பர்களே .....1000 ஏழைகளுக்கு சட்டையும் கொடுத்து,வயிறார ஒருவேளை உணவும் கொடுத்து அவர்களின் ஆசீர்வாதம் பெற்றிருந்தால்,என்னும் 10 கிலோவில சட்டையும் பாண்டும் சேர்த்துப் போட்டிருக்கலாம்......?
Rate this:
Share this comment
Cancel
Jana - rajapalayam,இந்தியா
02-ஜன-201318:56:59 IST Report Abuse
Jana நாட்டில் எந்த கட்சி இலவசங்கள் நிறைய கொடுக்கும் என்று வாயை பொளந்து காத்திருப்பவர்களுக்கு இது சற்று எரிச்சலாகத்தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Ram Santhya - Tirunelveli,இந்தியா
02-ஜன-201314:32:52 IST Report Abuse
Ram Santhya டேய் நாட்ல எவ்ளோ பஞ்சம் தெரியுமாடா உனக்கு ?
Rate this:
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
01-ஜன-201319:19:47 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA நம் டாஸ்மாக் திராவிட கோமான்களின் வயறு எரிச்சலை இங்கே தாராளமா பார்க்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
01-ஜன-201318:11:24 IST Report Abuse
Mustafa இதைதான் தலைவர் ஏற்கனவே பாடியிருக்கிறாரே " கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே தங்கபஸ்பம் திண்ணவனும் மண்ணுக்குள்ளே " என்று
Rate this:
Share this comment
Cancel
Ram Kumar - ramanathapuram,இந்தியா
01-ஜன-201317:56:52 IST Report Abuse
Ram Kumar அவன் உழைச்சு அவன் ஆசை பட்டதை செய்யுறான். இதுக்கு நம்ம எதுக்கு பொறாமை படனும்.சதாம் ஹுசைன் கூட தான் தங்க டாய்லட் ல உச்சா போனான்.
Rate this:
Share this comment
Cancel
abdul karim - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜன-201316:35:22 IST Report Abuse
abdul karim தங்கத்தில் மேல் இத்தனை ஆசையா ? அப்போ தங்க பல்லு கட்டி தங்க சோறு சாபிடுப்பா ?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
01-ஜன-201316:20:11 IST Report Abuse
Pugazh V தியாகராஜா பாகவதர் என்ற நடிகர், அந்தக் காலத்திலேயே தங்கத் தட்டில் சாப்பிடுவார் என்று படித்திருக்கிறேன். அதிக வட்டிக்குப் பேராசைப் படும் மக்கள் சிட்பண்டில் பணம் போடுவதால் இவர் கொழிக்கிறார். பொறாமைப் பட்டுப் பிரயோஜனம் இல்லை. ரிஸ்க் எடுத்து பிசினஸ் செய்து பணம் பண்ணி, அனுபவிக்கிறார். ஜோரா கை தட்டி விட்டு, நம்ம வேலையைப் பார்க்க வேண்டியது தான்.
Rate this:
Share this comment
Cancel
Aleem Raja - kampala,உகான்டா
01-ஜன-201315:22:13 IST Report Abuse
Aleem Raja /தங்கத்தின்மேல் தணியாத தாகம் உண்டு/ ........ போகும்போது கொண்டுதான் போகபோகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
01-ஜன-201314:53:45 IST Report Abuse
Nalam Virumbi இது போன்றவர்கள் நமது நாட்டின் அவமான சின்னம்.
Rate this:
Share this comment
Kunjumani - Chennai.,இந்தியா
04-ஜன-201302:47:21 IST Report Abuse
Kunjumaniஐயா ஊரார் பணத்தை கொள்ளை அடித்து இது மாதிரி செய்து இருந்தால் நீர் கூறுவது பொருந்தும். அவர் சம்பாதித்த பணத்தை அவர் ஆசைப்பட்ட விதத்தில் செலவழிக்கிறார்...பல் இருக்கிறவன் பக்கோடா தின்னுகிறான் அதை பார்த்து பல் இல்லாத நாம் ஏன் வயிறு எரிய வேண்டும்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை