A new praying offer in temple festivel at hosure | சிறுமியர், பெண்களுக்கு "சாட்டையடி' : வினோத நேர்த்தி கடன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமியர், பெண்களுக்கு "சாட்டையடி' : வினோத நேர்த்தி கடன்

Added : ஜன 01, 2013 | கருத்துகள் (6)
Advertisement
சிறுமியர், பெண்களுக்கு "சாட்டையடி' :  வினோத நேர்த்தி கடன்

ஓசூர்: ஓசூர் அருகே, கோவில் திருவிழாவில், பெண்கள் மற்றும் சிறுமியர் மீது பேய் நெருங்காமல் இருக்க, சாட்டையால் அடித்தும், ஆண்கள் தலையில் தேங்காய் உடைத்தும், வினோத வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், குரும்பர் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். தற்போது, சொந்த ஊர்களில் வசிப்பவர்கள், ஆடு மேய்ச்சல் தொழிலை செய்து வந்தாலும், வேலை வாய்ப்புக்காக, இடம் பெயர்ந்தவர்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களின், குல தெய்வமான, வீரபத்திர சுவாமிக்கு விழா எடுத்து, ஆண்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பெண்களை சாட்டையால் அடித்தும், வினோத முறையில் நேர்த்தி கடன் செலுத்துவதை, வழக்கமாக செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா எலவம்பட்டி, குறும்பேரி கிராமங்களை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி பகுதியில் வசிக்கின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும், புத்தாண்டையொட்டி, ஓசூர் மூக்கண்டப்பள்ளி தோப்பம்மா தேவி கோவில் வளாகத்தில், தங்கள் குலதெய்வமான வீரபத்திர சுவாமி கோவில், திருவிழாவை கொண்டாடுவர். நேற்று, புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை செய்தனர். குறும்பர் இன பராம்பரிய நடனமான, சேவாட்டம் நடந்தது.அதன் பின், தேங்காய் உடைக்கும் பக்தர்கள், கைளை மேலே உயர்த்தி, தங்கள் குலதெய்வத்தை வணங்கினர். அவர்கள் தலை மீது, கோவில் குருசாமி தேங்காய்களை உடைத்தார். வீரபத்திர சுவாமி சத்தியா வந்து தேங்காயை உடைப்பதால், தங்கள் தலைக்கு வலி ஏற்படவில்லை என, பக்தர்கள் தெரிவித்தனர்.சிறுமியர் மற்றும் பெண்களை, பேய் நெருங்காமல் இருக்க, சாட்டையால் அடிக்கும் வினோத வழிப்பாடும் நடந்தது. சிறுமியர், பெண்கள் வரிசையாக நிற்க, அவர்கள் கைகள், முதுகில், கோவில் குருசாமி சாட்டையால் அடித்தார்.இதுகுறித்து, கோவில் குருசாமி, வீரபத்திரப்பா கூறியதாவது;எல்லா தெய்வங்களுக்கும், குழந்தை பருவ காலம் உண்டு. ஆனால், எங்கள் தெய்வமான, வீரபத்திர சுவாமிக்கு, குழந்தை பருவ காலம் கிடையாது. வீரத்தில் பிறந்த எங்கள் சுவாமிக்கு, தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும், வழிப்பாட்டால், தங்கள் உடல் ஆரோக்கியம் பெருகும். வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது, எங்களுடைய நம்பிக்கையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
03-ஜன-201301:59:41 IST Report Abuse
GOWSALYA இறைவன் அன்புக்கும்,பக்திக்கும் தான் அடிமையே தவிர இப்படியான மூட நம்பிக்கையையோ,தங்கநகை காணிக்கையோ,அவர் கேட்கவில்லை.இவர்கள் எப்போ திருந்தப்போகிறார்கள்?...சென்ற வருஷம் "" சொல்வதெல்லாம் உண்மை"' என்ற நிகழ்ச்சி ஒன்றில்,பெற்றோர் தமது 14 வயசுப் பெண்பிள்ளையை { அவளின் உடலில் அம்மன் வந்து எல்லாம் நடக்கிறது என்று } உபயோகித்து,பணம் சம்பாதிக்கிறார்கள்.அவர்களை சொ.உண்மைக்குழுவினர் போலீசில் ஒப்படைச்சு இருக்கணும்,ஆனால்,????தெரியாது...?
Rate this:
Share this comment
Cancel
kannan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜன-201312:54:00 IST Report Abuse
kannan இன்னுமா இப்பிடிப்பட்ட மூடநம்பிக்கை
Rate this:
Share this comment
Cancel
Ram Santhya - Tirunelveli,இந்தியா
02-ஜன-201311:29:57 IST Report Abuse
Ram Santhya புடிங்க சார் அவன புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் ? சாட்டையாள அடிப்பானாம்ல ?
Rate this:
Share this comment
Cancel
Ram Santhya - Tirunelveli,இந்தியா
02-ஜன-201311:24:42 IST Report Abuse
Ram Santhya டேய் உங்களல்லாம் சுனாமி ஏன்டா தூக்கல ?
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
02-ஜன-201309:46:13 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இது போன்ற மூட நம்பிக்கைகள் எப்போது விலகுமோ? என் இதுமாதிரி கொடூர நேர்த்திக்கடன்?
Rate this:
Share this comment
Cancel
parvathy murali - melbourne,ஆஸ்திரேலியா
02-ஜன-201304:51:08 IST Report Abuse
parvathy murali ஆண்டவன் அன்பின் வடிவம் அவர் ஒருநாளும்இப்படிப்பட்ட கடுமையான நேர்த்திகடன் கேட்கமாட்டார் எப்போது இவர்களின் மூட நம்பிக்கை போகும்? ஆண்டவனுக்குத்தான் தெரியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை