Advertisement
இறந்தவரின் உடலை பெற ஜி.எச்.,ல் நடைமுறை தெரியாமல் திணறும் உறவினர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2013
22:54

அரசு மருத்துவமனையில் உயிரிழப்போரின் உடலை பெறுவதற்கான விதிமுறை என்ன என்பது தெரியாமல், இறந்தவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை சிகிச்சைப்பிரிவுகளில் அங்கும் இங்கும் அலைக் கழிக்கப்படுகின்றனர். கோவை நகர், புறநகர் பகுதிகளில் நடக்கும் விபத்து, தற்கொலை, கொலை போன்ற சம்பவங்கள் மற்றும் நோய் பாதிப்புக்குள்ளாகி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் இருக்கும்போது இறப்போரின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் வைக்கப்படுகின்றன.நோய் பாதிப்பால் இறந்தோர் தவிர, பிற சம்பவங்களில் இறந்தோரின் உடலைப்பெற, அந்தந்த பகுதி போலீசார் கொடுக்கும் பிரேத பரிசோதனைக்கான வேண்டுகோள் கடிதத்தின் அடிப்படையில், பிரேத பரிசோதனை முடித்து உரியவர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது.மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் இருக்கும்போது இறப்போரின் உடலைப் பெறுவதற்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தகுந்த சான்றுகளை அளித்தால் மட்டுமே உடல் வழங்கப்படுகிறது. இதுபோன்ற விபரங்கள் தெரியாத பொதுமக்கள் இறந்தவரின் உடலை உடனடியாக தங்களிடம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மருத்துவமனை விதிமுறை குறித்து ஊழியர்கள் சொல்லும்போது, கோபத்தில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்; சிலசமயங்களில் கைகலப்பும் ஏற்படுகிறது.கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சிவப்பிரகாசம் கூறியதாவது:பல்வேறு நோய் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனை சிகிச்சைப்பிரிவுகளில் இறப்போரின் உடல்களும், மார்ச்சுவரியில் வைக்கப்படுகிறது.

இந்த உடல்களை பெற சில நடைமுறைகள் உள்ளன.
அடிதடி, விபத்து மற்றும் தற்கொலை முயற்சியில் இறந்தோரின் உடல்களை பெற அந்தந்த பகுதி போலீசார் அளிக்கும் பிரேத பரிசோதனை வேண்டுகோள் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்பே பிரேத பரிசோதனை செய்த உடல் போலீசார் முன்னிலையில், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.நோயால் இறந்தவரின் உடலை பெற, அவர் சிகிச்சை பெற்ற வார்டில் வழங்கப்படும் மருத்துவ அறிக்கையை மார்ச்சுவரியில் கொடுக்க வேண்டும். மார்ச்சுவரியில் வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, விண்ணப்பத்துடன் இணைத்து, மருத்துவ அலுவலரின் கையெழுத்தைப் பெற்று மீண்டும் மார்ச்சுவரியில் கொடுக்க வேண்டும். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகளிடம் மட்டுமே உடல் ஒப்படைக்கப்படும். குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் இல்லாத நிலையில், இறந்தவர் வசித்து வந்த பகுதி கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெற்று வரும் பட்சத்தில், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். பிரேத பரிசோதனை முடிந்த ஒரு வாரத்தில், இறப்பு குறித்த விபரம் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்படும். மாநகராட்சியில் விண்ணப்பித்து இறப்பு சான்று பெற்றுக்கொள்ளலாம்.கோவை அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் இருந்து உடலை எடுத்துச் செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. மருத்துவமனையில் இலவசமாக இயக்கப்படும் மூன்று அமரர் ஊர்திகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு, ஆர்.எம்.ஓ., டாக்டர் சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.