Advertisement
அனுமதியின்றி இயங்கிய 4 சாய ஆலைகளுக்கு "சீல்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013,23:10 IST

திருப்பூர்:திருப்பூரில் நேற்று ஒரே நாளில், அனுமதியின்றி இயங்கிய நான்கு சாய ஆலைகளுக்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
திருப்பூரில் அனுமதியின்றி சாய ஆலைகள் இயக்குவது தொடர்கிறது. இந்த ஆலைகளில் இருந்து கழிவுநீர், சுத்திகரிப்பு செய்யப்படாமல், நொய்யலாறு, ஜம்மனைப்பள்ளம், சங்கிலிப்பள்ளம் போன்றநீர் நிலைகளில் விடப்படுகிறது.பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில், மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட பறக்கும்படை பொறியாளர் மலையாண்டி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் சத்தியராஜ் ஆகியோர் தென்னம்பாளையம் பகுதிகளில் நேற்று மாலை ஆய்வு நடத்தினர். தென்னம்பாளையம் சத்யமுத்துசாமி தோட்டம் சேகர் என்பவருக்கு சொந்தமான கே.ஜி., காம்பவுண்டில், தங்கபாண்டியன், ரவி, வெங்கடேஷ்வரன் ஆகியோர் தனித்தனியே, "விஞ்ச்' மெஷின் அமைத்து, சாய ஆலை நடத்தியது தெரியவந்தது. சாயக்கழிவு நீரை, சுத்திகரிப்பு செய்யாமல், அருகில் செல்லும் சங்கிலிப்பள்ளம் ஓடையில் விட்டுள்ளனர்.
அப்பகுதியில், ஆய்வு செய்த மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஒரே வளாகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட அம்மூன்று சாய ஆலைகளையும் "சீல்' வைத்து, துணிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய ஆய்வில், தென்னம்பாளையம் மணி என்பவருக்கு சொந்தமான, மணி காம்பவுண்டில், சாய ஆலை இயங்கியது தெரியவந்தது. செந்தில்குமார் என்பவர், 40 கிலோ கொள்ளளவு உள்ள விஞ்ச் மெஷின் வைத்து, இரவு நேரங்களில் மட்டும் சாயமிட்டு, கழிவு நீரை, சங்கிலிப்பள்ளம் ஓடையில் விட்டுள்ளார். அந்த சாய ஆலையும் "சீல்' வைக்கப்பட்டது.பறக்கும்படை பொறியாளர் மலையாண்டி கூறுகையில், "" திருப்பூரில் உள்ள நீராதாரங்களை பாதுகாக்கும் வகையில், அனுமதியின்றி இயங்கும் சாய ஆலைகள் குறித்து, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இன்று (நேற்று), நான்கு சாய ஆலைகளுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ளது; ஆலைகளில் பயன்படுத்திய, "விஞ்ச்' மெஷின்கள் அப்புறப்படுத்தப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்படும்,'' என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
manikmani - tirupur,இந்தியா
07-ஜன-201307:16:44 IST Report Abuse
manikmani முதலில் இவர்கள் துணையோடு நடக்கும் தனியார் பட்டறைகளை மூடிவிட்டு பின்னர் இந்தவேளைகளை செய்யட்டும். ஈரோட்டில் காவிரி ஆற்றில் அதிகாரிகள் துணையோடு தண்ணீரை கலக்குகிறாக்கள் தினமும் இந்து பேப்பரில் போட்டோவோடு நியூஸ் வருகிறது அங்கே ஒரு நடவடிக்கையை காணோம் இங்கே போட்டோவோடு போஸ் வெட்கக்கேடு. சாயா ஆலையை பிடித்தால் உடைத்து எறியவேண்டும் அதைவிட்டு சீல் வைக்கிறார்கலம் இதெல்லாம் வெறும் நாடகம். ஈரோட்டில் இருக்கும் மாசுக்கட்டுபாட்டு வாரியம் ஒன்னும் புடுங்கவில்லை இவர்கள் புடுன்குகிரார்கலாம் தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற மாசுக்கட்டுபாட்டு வாரியம் எல்லாம் மாசு கெட்டுபோன வாரியம் திருப்பூரில் உள்ள வாரியம் மாசே இல்லாத வாரியம் திருப்பூருக்கு ஒரு சட்டம் தமிழ்நாட்டுக்கு ஒரு சட்டம் தமிழ்நாடே கேட்டு குட்டிசுவர் ஆகுது அதை கண்டுபிடிக்க ஆளை காணோம் மோகன் கமிட்டிக்கு தமிழ்நாடு தெரியாது திருப்பூர் மட்டும் தெரியும் ஏனென்றால் இங்கே மட்டும்தான் சட்டத்தை மதிக்கும் முட்டாள்கள் இருக்கிறார்கள்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
ராஜேஷ் - Theni,இந்தியா
05-ஜன-201316:11:03 IST Report Abuse
ராஜேஷ் முதலில் சாய பட்டறைகளுக்கு Licence வழங்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
MuneesKumar K - Tirupur,இந்தியா
04-ஜன-201310:25:04 IST Report Abuse
MuneesKumar K .பறக்கும்படை பொறியாளர் மலையாண்டி அவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா..?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.