ஓசூர்: ஓசூர் எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த ஆஸ்திரேலியா ஆட்டை, 18 ஆயிரம் ரூபாய் கொடுத்து வியாபாரி வாங்கி சென்றார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ராயக்கோட்டை, கெலமங்கலம், தளி உட்பட மலைக்கிராமங்களில், கிராம மக்கள் அதிகளவு ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.கொடி ஆடு, கன்னி ஆடு, கறுப்பு பண்ணை ஆடு, பார்பாரி, மோளை ஆடு, கறுப்பு வங்காளம் ஆடு, தலைசேரி, சூர்த்தி, மார்வாரி, உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகளை வளர்த்து, முக்கிய பண்டிகை காலங்களில் விற்பனை செய்கின்றனர்.சமீப காலமாக, அதிக இறைச்சி தரும் புதிய ரக ஆடுகளை வளர்க்க, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஓசூர் அருகே, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் உள்ளதால், இப்பகுதியில் நடக்கும் பண்டிகை மற்றும் விழாக் காலங்களில், விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது, இறைச்சி ஆடுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை, "கிடுகிடு' வென உயர்ந்து வருகிறது.நேற்று, ஓசூர் எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் ஆட்டு சந்தை நடைபெற்றது. வழக்கமாக, 2,500 ஆடுகள் வரை விற்பனைக்கு வரும் சந்தையில், நேற்று, 1,010 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. உத்தனப்பள்ளியை சேர்ந்த விவசாயி மாரப்பா என்பவர் கொண்டு வந்த, ஆஸ்திரேலியா இன ஆட்டை, வியாபாரிகள் போட்டி போட்டு வாங்க முன் வந்தனர்.மற்ற ஆடுகளை விட, இந்த ஆடு கால்கள் மற்றும் காதுகள் பெரிதாக இருந்தன. 40 முதல், 50 கிலோ வரை எடை உள்ளது என்று கூறப்பட்டது. இறைச்சி ருசியாக இருப்பதோடு, தினமும், மூன்று லிட்டர் வரை பால் கொடுக்கும் என, அதை பராமரிக்கும்விவசாயி, தெரிவித்தார். இந்த ஆட்டை, 18 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வியாபாரி ஒருவர் வாங்கி சென்றார்.சோகன் கூறியதாவது:ஓசூர் பகுதியில் உள்ள தட்ப வெப்ப சூழ்நிலை காரணமாக, சமீப காலமாக விவசாயிகள் வெளி நாட்டு ஆடுகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இங்கு, லண்டனை சேர்ந்த, டார்ச்சர், டவுன் ரக ஆடுகள், கூட வளர்க்கப்படுகின்றன. சிறப்பு ரக ஆடு வளர்ப்பில் நல்ல லாபம் கிடைத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாட்டுக்கோழிகள் மட்டும் இருந்த 70களில் புதிதாக லகான் கோழிகளும் முட்டைகளும் அறிமுகமானபோது அதில்தான் நிறைய சத்து இருக்கிறது என்று ஒரு பிரேமை எல்லோருக்கும் இருந்தது. காலபோக்கில் பிராயிலர் கோழிகளும் முட்டைகளும் அதிகமான பிறகு மீண்டும் நாட்டுக் கோழிக்கும் நாட்டு முட்டைக்கும் விலையும் மவுசும்
கூடிவிட்டது ( 80களில் மட்டன் பிரியாணியைவிட சிக்கன் பிரியாணியின் விலை 2 ரூபாய் அதிகமாக இருந்தது)
2003 ஆரம்பத்தில் ரிலையன்ஸ் மொபைல் 20 ஆயிரம் அடுத்த 6 மாதத்தில் 500 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்றார்கள்
எந்த பொருளும் வுற்பத்தி அதிகமாகி போட்டியும் பெருகினால் சந்தை மலிந்துவிடும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.